Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜி ஜின்பிங் அரெஸ்ட், ஆட்சி கவிழ்ப்பு? கடந்த காலங்களில் அதிபர் பற்றி வெளியான தகவல்கள் என்ன! பரபர

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாகவும் அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவும் நிலையில், இப்படி தகவல் பரவுவது இது முதல்முறை இல்லை.

உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனா. கடந்த 20, 30 ஆண்டுகளில் மட்டும் சீனா அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது.

சில ஆண்டுகளில் மட்டும் சீனா பல கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவில் இருக்கும் ஒற்றை ஆட்சி முறை காரணமாக அங்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியில் உள்ளது.

 சீனா

சீனா

அந்நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் இருந்து வருகிறார். சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச் சமீபத்தில் இவர் உஸ்பெகிஸ்தான் சென்று இருந்தார். அதில் கலந்து கொண்டு நாடு திரும்பிய நிலையில், அதன் பின்னர் ஜி ஜின்பிங் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய அவரை ஏர்போர்ட்டில் வைத்தே ராணுவம் கைது செய்ததாகவும் சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவுகிறது.

முடக்கம்

முடக்கம்

குறிப்பாகச் சீனாவில் ராணுவம் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததாகவும் ஜி ஜின்பிங் இப்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி சீன ராணுவமோ அல்லது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியோ எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. மேலும், தலைநகர் பெய்ஜிங்கை ராணுவம் முற்றுகையிட்டு உள்ளதாகவும் இதன் காரணமாகவே விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 திடீர் மாயம்

திடீர் மாயம்

இருப்பினும், சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்து இப்படி தகவல்கள் பரவுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் இப்படி தகவல்கள் பரவி உள்ளன. கடந்த 2012இல் ஜி ஜின்பிங் துணை அதிபராக இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தொடங்கிப் பல தலைவர்கள் உடனான அவரது மீட்டிங்களை அவர் ரத்து செய்த போது இந்த தகவல்கள் பரவியது.

 விளக்கம் இல்லை

விளக்கம் இல்லை

அப்போது பல நாட்கள் ஜி ஜின்பிங் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இது தொடர்பாகச் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உயர் அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரை சிலர் கொலை செய்யச் சிலர் முயன்றதாகவும் எல்லாம் தகவல் பரவின. இறுதியில் இரு வாரங்களுக்குப் பின்னர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 மோதல்

மோதல்

கடந்த 2016இல் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் லீ கெகியாங் ஆகியோர் இடையோ மோதல் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. சீன நாடாளுமன்ற கூட்டங்களில் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் கைகளைக் கூட குலுக்கிக் கொள்ளவில்லை. நேரில் பார்ப்பதைக் கூட தவிர்த்தனர்.

 ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு

கடந்த 2017இல் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை எடுத்தார். அப்போது அதிருப்தியாளர்கள் சிலர் ஜி ஜின்பிங் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர். இருப்பினும், அதை அவர் வெற்றிகரமாக முறியடித்தாக சீனப் பத்திரங்கள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் லியு ஷியு 2017இல் தெரிவித்தார். இது சீன அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 மீண்டும் சவால்

மீண்டும் சவால்

கடந்த 2018இல் சீனாவின் பொருளாதாரம் மந்தநிலையை எட்டியது. ஒரு பக்கம் அமெரிக்கா உடன் வர்த்தக போர் நடக்க மற்றொரு புறம் ஊழல் புகார்கள் கிளம்பின. அப்போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் லீ கெகியாங் மீண்டும் ஜி ஜின்பிங்கிற்கு சவால் கொடுத்தார். அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழில் ஜின்பிங் பெயருக்குப் பதிலாக லீ கெகியாங் பெயரில் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கியது.

 பரவும் தகவல் உண்மையா

பரவும் தகவல் உண்மையா

ஜி ஜின்பிங் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் 2018இல் ஜூலையில் ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்ந்ததாகவும் எல்லாம் தகவல் பரவின. இருப்பினும், அதுவும் வதந்தி என்பது பின்னாட்களில் தெரிய வந்தது. இப்போது சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அப்படியொரு தகவல் பரவியுள்ளன. இது உண்மையா அல்லது பொய்யான தகவலா என்பது தெரிய இன்னும் கொஞ்சக் காலம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+