மீண்டும் உலகை மிரட்டும் 'ஜிக்கா' வைரஸ்.. 250 கோடி பேர் பாதிக்கபட வாய்ப்பு.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பிரேசில்: உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
"தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்" என்ற மருத்துவ இதழில் உலக அளவில் சுமார் 250 கோடி பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளி்ல் உள்ள மக்களுக்கு அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் பல இடங்களிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு குறையக்கூடும் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் ஜிக்கா வைரஸ் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொசு மூலமாக பரவும் இந்த நோய் முதன் முதலில் கடந்த 1947ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டு தான் இது தீவிரமாக பிரேசிலில் பரவியது. டெங்கு, சிக்கன்குன்யா ஆகியவற்றை பரப்பும் ஏடிஸ் ஏகிப்தி கொசு மூலமே ஜிக்கா வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications