ஃபேஸ்புக் மூலம் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: மார்கிடம் விசாரணை

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

சமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் பயன்படுத்த பார்க்கும் ரஷ்யர்களிடம் தொடர்ந்து போராடி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க செனேட்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனேட்டர்களிடம் பதிலளித்தார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் விசாரணையாளர் முல்லர், ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களை விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் தன்னை விசாரிக்கவில்லை என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக் குழுவுடன் நாங்கள் ஆற்றி வரும் பணியானது மிகவும் ரகசியமானது எனவே இங்கே நான் அதை சொல்ல விரும்பவில்லை என்றார் மார்க்.

பிப்ரவரி மாதம் முல்லர், மூன்று ரஷ்ய நிறுவனங்களுடன் சேர்த்து 13 ரஷ்யர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.

தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்தார் மார்க்.

"ரஷ்யாவில் இருக்கும் சிலரின் பணி நமது அமைப்பை தங்களது சுய நலத்துக்காகவும் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி கொள்வதுதான் நாம் அதை சரிசெய்வதற்கும் முதலீடு செய்ய வேண்டும்" என்றார் மார்க்.

சமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப்படலாம் என அமெரிக்க செனேட்டர்கள் மார்க் சக்கர்பர்கிடம் கேள்விகளை கேட்டனர்.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
Facebook CEO Mark Zuckerberg has told US senators his company is in a constant battle with Russian operators seeking to exploit the social network.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற