Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ஏக்கர்; 10 மாடி; 13 பிளாக் , 700 கோடி! 18000 பேருக்கு ஒரே இடத்தில் ஹாஸ்டல் வசதியா?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் வேலை பார்த்து வரும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒரே இடத்தில் சுமார் 700 கோடி செலவில் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த விடுதிகளில் உள்ள வசதிகள் என்ன தெரியுமா?

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்களை மையப்படுத்திப் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் புதிய புதிய திட்டங்களை யோசித்து இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம், மகளிருக்குக் கட்டணம் இல்லாத பேருந்து சேவை, கல்லூரி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை என அனைத்தும் மகளிர் மேம்பாடு தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்தான்.

Sipcot Sriperumbudur

இன்னும் மறைமுகமாகப் பார்த்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கூட தாய்மார்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். வேலைக்குப் போகும் பெண்கள் காலை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் போது சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைக் கொடுத்து அனுப்ப வேண்டிய நிலை இருப்பதை உணர்ந்தே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பல முறை முதல்வர் ஸ்டாலினே விளக்கம் அளித்திருக்கிறார்.

வீட்டைக் கவனித்துக் கொள்ளும் குடும்பத் தலைவிக்கு உதவி, படிக்கும் பெண்களுக்கு உதவி, வேலைக்குப் போகும் மகளிருக்கு உதவி எனப் பார்த்துப் பார்த்துச் செய்த முதல்வர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பெண்களின் வசதிக்காக 'தோழி' என்ற பெயரில் நவீன வசதிகளைக் கொண்ட விடுதியைத் திறந்தார். நாட்டிலேயே வேலைக்குப் போகும் பெண்கள் தங்குவதற்கு என 'விடுதி'களை அரசு சார்பில் கட்டிக் கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற பெயர் இதன் மூலம் கிடைத்தது. எடுத்த எடுப்பிலேயே திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் 11 தங்கும் விடுதிகளைத் தமிழ்நாடு அரசு திறந்தது.

இப்போது அதன் தொடர்ச்சியாக ஒரு மாபெரும் திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு என்றே தனியாகத் தங்கும் விடுதிகளைத் திறந்து வைத்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டில் வேலை செய்யும் பெண்களில் மொத்தம் 42% பேர் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். எனவே இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக, 18,720 வேலை பார்க்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை வழங்கும் மெகா உள்கட்டமைப்புத் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் வீட்டு வசதி வாரியம் சார்பாக உருவாக்கியுள்ளோம். அதனைப் பயன்பாட்டுக்காக வேண்டித் திறந்து வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Sipcot Sriperumbudur

இந்த விடுதிகள் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் சுமார் 706.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிரா வசதி, லிஃப்ட் வசதி, நல்ல குடிநீர், பூங்கா, உடற்பயிற்சி கூடம் என அனைத்து வசதிகளையும் இந்த விடுதிகள் கொண்டுள்ளன. மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விடுதி பல அடுக்குமாடி கட்டடங்களைக் கொண்டது. மொத்தம் 13 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாக் கட்டடமும் தரைதளத்தைச் சேர்க்காமல் 10 மாடிகளைக் கொண்டுள்ளது. ஒரு தளத்தில் மொத்தம் 24 அறைகள் உள்ளன. ஒரு அறைக்கு 6 படுக்கைகள் உள்ளன. ஒரு பிளக்கில் கிட்டத்தட்ட 1440 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இங்கே மின்சாரம் இல்லை என்ற பிரச்சினையே வராமல் இருக்க ஒவ்வொரு பிளாக்கின் மேல் தளத்திலும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே 100% மின் தேவையை இதுவே பூர்த்தி செய்யும் அளவுக்கு பவர் பேக் அப் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. தங்கி இருப்பவர்கள் தங்களின் துணிகளைத் துவைப்பதற்காகத் தனியாக ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாப்பிடுவதற்கும் தனி அறை உள்ளது. ஆர்ஓ வசதியுடன் குடிநீர் வழங்கப்படுகிறது.

இதைத்தாண்டி கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய வசதியும் இங்கே உள்ளது. குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான தனி பளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் உச்சமாக மழை பெய்தால் வெள்ளம் வராமல் இருக்க மழைநீர் சேமிப்பு பக்காவாக செய்யப்பட்டுள்ளது. அதற்கான கால்வாய் வழியே நீர் வெளியேறிச் சேமிப்பு தொட்டிக்குள் சென்றுவிடும். ஆகவே சாலைகளில் வெள்ள நீர் தேங்காது. இந்தப் பகுதியில்தான் சிப்காட் தொழிற்பூங்காவில்தான் ஹூண்டாய் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கே ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அவர்கள் இதுவரை வேலை முடிந்ததும் பஸ்பிடித்து பக்கத்தில் உள்ள பெருநகரத்தில் போய் தங்க வேண்டிய நிலை இருந்தது. ஒருநாள் முழுக்க வேலை செய்துவிட்டு, மீண்டும் அலைந்து திரிந்து வீட்டுக்குச் சென்று வந்த பெண்கள் இப்போது மிகப்பெரிய விடுதலை பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+