“சிறந்த திருநங்கை” விருது பெற்ற சந்தியாதேவி! வில்லிசையில் விழிப்புணர்வு.. வார்டு மெம்பர்! யார் இவர்?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் கைகளில் இருந்து சிறந்த திருநங்கை விருது பெற்றுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி. ரூபாய் 1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின். நூற்றுக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வரும் சந்தியா தேவி யார்?
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது கன்னியாகுமரியைச் சேர்ந்த சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டது. திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில் தொடர் சேவை புரிந்ததற்காக சந்தியா தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த திருநங்கை விருது: திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக கடந்த 25 ஆண்டுகளாக வில்லிசைக் கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவியின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
யார் இந்த சந்தியா தேவி?: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் சந்தியாதேவி. திருநங்கையான இவர் தற்போது தோவாளையில் வசித்து வருகிறார். தோவாளையில் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு அதனைக் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் முதல் திருநங்கை வில்லிசை கலைஞர் என்ற பெருமை பெற்றவர்.
வில்லிசையின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்கள், மற்றும் கலாச்சார விழாக்களில் சந்தியா தேவி வில்லிசை கச்சேரிகளை நடத்தியுள்ளார், 1000 க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார்.
வில்லிசையில் விழிப்புணர்வு: வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக வில்லிசை கலையை பரப்பி வருகிறார் சந்தியா தேவி.
பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார். மேலும், தோவாளையைச் சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும், மனவளர்ச்சி குன்றிய ஒரு 8 வயது குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.
மக்கள் பணி: மேலும், பொதுச்சேவை மற்றும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் சந்தியா தேவி ஆர்வம் காட்டி வந்தார். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் தோவாளை ஊராட்சி 4-வது வார்டில் போட்டியிடுமாறு அப்பகுதி மக்கள் சந்தியாதேவியிடம் வலியுறுத்தினர். மக்களின் விருப்பத்தை ஏற்று போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராகி மக்கள் சேவை ஆற்றி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காலகட்டத்தில், சமூக இடைவெளி விட்டு தோவாளை 4வது வார்டு பகுதி மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சரியான புரிதல் இன்றி இருந்த கிராம பெண்களிடம் தனித்திருப்பதின் அவசியத்தையும், முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தம் செய்வது குறித்தும் எடுத்து கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரசின் அங்கீகாரம்: மேலும் அங்குள்ள கோயில்களில் சமூக இடைவெளியுடன் தனது வில்லிசை குழுவுடன் அமர்ந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி வந்தார். வில்லிசை கேட்க வருவோரையும் முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதித்தார். அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வை, திருநங்கை கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி வருவதை அறிந்த சுகாதாரத்துறையினர், மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் சந்தியா தேவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2023 - 2024ம் ஆண்டிற்கான 'சிறந்த திருநங்கை விருது' திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications