காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரப் போகுது! பிரியாணி கடைகளை மூடுங்க! காஞ்சிபுரத்தில் பறந்த ஆர்டர்!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் : கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் இறைச்சி, பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரப் போகுது! பிரியாணி கடைகளை மூடுங்க! காஞ்சிபுரத்தில் பறந்த ஆர்டர்!

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை அமைக்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை முடிந்த பிறகு செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

    சென்னையில் 5,200 விநாயகர் சிலைகள்..பிரம்மாண்டம் காட்ட தயாராகும் இந்து அமைப்புகள் சென்னையில் 5,200 விநாயகர் சிலைகள்..பிரம்மாண்டம் காட்ட தயாராகும் இந்து அமைப்புகள்

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி

    இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து கரைக்கப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி, பிரியாணி கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் காவல்துறை

    காஞ்சிபுரம் காவல்துறை

    அந்த உத்தரவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் இறைச்சிக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகிற 31-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதாலும், செப்டம்பர் 2,4 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

     பிரியாணி கடைகள்

    பிரியாணி கடைகள்

    எனவே செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இருதினங்களுக்கு தங்களது கடையை மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    இது குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டபோது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போது இறைச்சி கடைகள் பிரியாணி கடைகள் செயல்பட்டால் அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்தும் செயலாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    English summary
    the police have ordered the closure of meat and biryani shops on September 2 and 4 in view of Vinayagar Chaturthi procession in the areas under Sivakanchi police station limits in kanchipuram ; காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இறைச்சி மற்றும் பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X