தேர்வு அறையில் செல்போன்.. அவமானப்படுத்திய ஆசிரியர்.. மாடியில் இருந்து குதித்த மருத்துவ மாணவி
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்திய மாணவியை தரம் தாழ்த்தி பேசி ஆசிரியர் வெளியே அனுப்பியதால் மன உளைச்சலுக்கு உள்ளான முதலாம் ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது.இங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் அனைத்து வகையான மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர். பிளஸ் 2 துணைத்தேர்வு.. ஆகஸ்டு 6 முதல் 19 வரை நடைபெறும்.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு அரசு
இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பு படிக்கும் அம்பத்தூர், புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி(20) என்ற மருத்துவக் கல்லூரி மாணவி பயின்று வருகிறார்.

தேர்வு அறை
கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சோனாலி தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததால் அப்போது தேர்வு அறைக்கு வந்த தேர்வு கண்காணிப்பாளர் சோனாலி செல்போன் வைத்திருந்ததை அறிந்து அவளிடம் செல்போனை பிடுங்கி கொண்டு தரம் தாழ்த்தி பேசி வெளியேறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாடியில் இருந்து குதித்தார்
தேர்வு எழுதிய ஏழாவது மாடியிலிருந்து கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு மூன்றாவது மாடிக்கு வந்த சோனாலி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் தலை மற்றும் உடல்களில் பலத்த காயமுற்று சோனாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார்
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சோனாலியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சோனாலி தற்கொலைக்கு காரணம் தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தி கையும் களவுமாகப் பிடித்து வெளியேறியதால் மனஉளைச்சலுக்கு தற்கொலை செய்து கொண்டாலா அல்லது வேறு எதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications