சீமானுக்கு இது தெரியுமா.. நாம் தமிழர் கட்சி போஸ்டரில் சாணியை கரைச்சி ஊத்திட்டாங்களாமே.. ஒரே பரபரப்பு
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வரையப்பட்ட சுவர் விளம்பரத்தில் சாணம் கரைத்து ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர். கடந்த 2010இல் உருவான நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

என்எல்சி விவகாரம் தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக மக்களைக் குறிப்பாக இளைஞர்களை அதிகம் கவர்ந்த கட்சிகளில் ஒன்றாக நாம் தமிழர் இருக்கிறது.
சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமானின் அதிரடி சரவெடி பேச்சுகள் இளைஞர்களைக் கவரும் வகையிலேயே இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பலரும் நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சீமானின் பேச்சுக்கள் டிரெண்டிங் ஆவதும், அவரது ஆதரவாளர்கள் பதிவிடும் கருத்துகளுமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இதுவரை 2016, 2021 என இரண்டு சட்டசபைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் இதுவரை வெல்லவில்லை. அதேநேரம் அதன் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 2016இல் 1 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி கடந்த 2021 தேர்தலில் 6.89%ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி இதுவரை அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரம்: இதற்கிடையே அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாம் தமிழரும் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அக்கட்சி சார்பில் மாநிலம் முழுக்க நடைபெறும் நிகழ்ச்சிகளில் சீமான் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

பரபரப்பு: தமிழகத்தில் நாம் தமிழருக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர். கடந்த 2021 தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அங்கே 8 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். அந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நடந்த சம்பவம் அங்குள்ள நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கே இருந்த நாம் தமிழர் சுவர் விளம்பரத்தில் யாரே சிலர் சாணம் கரைத்து ஊற்றியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது நாம் தமிழர் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. தங்கள் கட்சி சுவர் விளம்பரத்தில் சாணத்தைக் கரைத்த ஊற்றியவர்கள் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications