ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
காஞ்சிபுரம்: சதுரங்க வேட்டை படத்தில், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால், முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சொல்வது போல திமுக 2021 சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத 520 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் அவற்றில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயகப்படி இருக்கின்ற கட்சி என்றால் அது அதிமுக தான். இந்தியாவிலேயே ஜனநாயகப்படி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். ஆனால் திமுகவில் அப்படியில்லை. ஸ்டாலினுக்கு அப்புறம் உதயநிதி.. உதயநிதியை திமுக மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இப்போது அடுத்ததாக இன்பநிதியை ஏற்கவும் திமுக மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்னங்க இது அடிமைத்தனம். உழைப்பாளிகள் நிறைந்த கட்சி அதிமுக. இந்த கட்சியை பார்த்து ஸ்டாலின் பேசுறார். அதிமுக பத்து ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது என்று வாய் கூசாமல் பேசுகிறார். விவசாயத்தை பற்றி தெரியாமல் நாடகம் ஆடும் முதலமைச்சர் தான் ஸ்டாலின்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி வாய்பேச முடியாத கால்நடைகளின் நலனுக்காக கால்நடைகளுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இன்றைக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசல் கூட்டுரோட்டில் ரூ. 1000 கோடியில் அமைத்து கொடுத்தோம். இதை கூட திறந்து வைக்க கூட வக்கில்லாமல் இருப்பது தான் விடியா திமுக அரசு.
சதுரங்க வேட்டை படம் பார்த்தேன். அதிலே நடிகர் சொல்வார், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால், முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று. அப்படி தான் 2021 சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத 520 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. 520 அறிவிப்புகளில் இன்றைக்கு எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 5 சதவீதம் கூட இல்லை.
மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் என்று சொல்லிவிட்டு இப்போ பாத்தீங்க என்றால் ஒருசிலருக்கு மட்டும் கொடுத்து இருக்கிறார். அதிமுக அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த ஆயிரம் ரூபாய் மக்களுக்கு கிடைத்துள்ளது. அதையும் உடனே கொடுக்கவில்லை. 27 மாதம் கழித்து கொடுத்திருக்கிறார்கள். இதனால் 27 ஆயிரம் போச்சு. அதிமுக என்றால் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கொடுத்து இருப்போம். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இல்லையென்றால் அதிமுக கூட்டணியை பற்றி திமுக ஏன் கவலைப்பட வேண்டும்.
அயலக அணி என்று திமுகவினர் வைத்திருக்கிறார்கள். எந்த கட்சியிலாவது அயலக அணி என்று இருக்கிறதா.. அப்படி ஒரு அணியை உருவாக்கி அந்த அணியில் இருக்கின்ற பொறுப்பாளார் வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தியிருக்கிறார். பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்.. ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டது.. எடப்பாடி
2 ஆயிரம் கோடி. இந்த ஆட்சி முடிவதற்குள் 2 லட்சம் கோடி கடன் வாங்கிவிடுவார். 6 லட்சம் கோடி கடன் வாங்கி மக்கள் தலையில் கட்டிவிட்டு போய்விடுவார். பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும். வட்டியும் கொடுக்க வேண்டும். இந்த நிலைமைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர் எழுந்தருளி தரிசனம் தருவார். இன்றைக்கு 60 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசனம் செய்கின்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளும் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது. இதேபோல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications