காருக்குள் 5 பேர் நடத்திய கொடுமை.. போதையில் கண்ணாடியை அடித்த பெண்.. இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இளம் பெண்ணுக்கு காதல் வலை வீசிய ஒருவர், அந்த பெண்ணைவேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி காரில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் காருக்குள் வைத்து இளம் பெண்ண பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மதுவால் போதை தலைக்கேறி எதுவும் செய்ய இயலாத துயரமான நிலைக்கு தள்ளப்பட்ட அந்த பெண்,. அதன் பின்னர் அளித்த புகாரின் பேரில் 4 பேரை கைது செய்து மேலும் தலைமறைவாக உள்ள ஒரு நபரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் பெரு நகராட்சியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்து செல்லும் வணிகர் வீதியை சேர்ந்த குணசீலன் என்பவர் மீனாவிற்கு காதல் வலை வீசியிருக்கிறார்.

வேலை மோசடி
மேலும் மீனாவிற்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை தரும் வகையில் பேசி உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் செல் நம்பர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நண்பராக இணைந்து அந்த பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் குணசீலன் மீனாவை காதலிப்பது போல், பொய்யாக நடித்து பேசியிருக்கிறார். அந்த பெண்ணும் ஒரு கட்டத்தில் நம்ப தொடங்கியது

கட்டாயப்படுத்தினார்
இதையடுத்து குணசீலன் மீனாவை அடைய அதிர்ச்சி திட்டம் தீட்டி உள்ளார். அந்த பெண்ணிடம் எங்களுடைய பூர்வீக சொத்துக்கள் உள்ள மேல்கதீர்பூர் கிராமத்துக்கு சென்று வருவோம் என கட்டாயப்படுத்தி, தன்னுடைய மாருதி ஷிப்ட் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் வழியிலேயே மீனாவிற்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார்.

நண்பர்களுக்கு அழைப்பு
மீனாவிற்கு போதை ஏறியவுடன் தன்னுடைய நண்பர்களான , மேட்டு காலனி சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபநேசன் (வயது 29), ஓரிக்கை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (வயது 24), காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வீதியை சேர்ந்த அஜித் (வயது 23) மற்றும் காமராஜ் ஆகியோரை செல்பேசியில் அழைத்து மேல்கதிர்பூரிலுள்ள தன்னுடைய பம்பு செட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.

நிர்வாண கோலம்
அதையடுத்து நான்கு நண்பர்களும் அந்த இடத்துக்கு வந்தவுடன் அந்த இளம்பெண்ணை காரில் வைத்து ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் வலி தாங்க முடியாமல் காரின் கண்ணாடியை ஓங்கி ஓங்கி அடித்து உள்ளார். அப்பகுதியில் விவசாய வேலை செய்துவிட்டு, அந்த வழியே சென்ற பெண்கள் காரில் இருந்து சத்தம் வருவதை கண்டு காரின் அருகே வந்து பார்த்துள்ளனர் . காரின் உள்ளே நிர்வாண கோலத்தில் அந்த இளம் பெண்ணும், மற்ற இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர்.

இளம் பெண் புகார்
பின்னர் பம்பு செட் அருகே போதையில் இருந்து ,குணசீலன் பொதுமக்கள் கூட்டம் கூடிய உடன் சாவியை தூக்கி ஜெபநேசனிடம் வீசி இருக்கிறார். அதை பெற்றுக்கொண்ட ஜெபநேசன் அந்தப் பெண்ணுடன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி தப்பினார். மற்ற நண்பர்களும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்கள். இதனிடையே போதை தெளிந்த பின்னர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட அந்த இளம்பெண், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மீனா பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தன்னை 5 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனார்

வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அந்தப் பெண்ணிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதன்பேரில் வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், மற்றும் தொழிலதிபர் குணசீலன் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மீது கூட்டு பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தலைமறைவான காமராஜர் என்பவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications