கொடூரம்! கூல்டிரிங்ஸில் மதுபானம்.. 11ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவிக்கு குளிர் பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் 9ஆம் வகுப்பும், இன்னும் 2 மாணவர்கள் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அஜய் என்பவர் அந்த 3 மாணவர்களுடன் இணைந்து 11ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர் பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனை அறியாமல் அந்த மாணவி குளிர் பானத்தை குடித்துள்ளார். இதன்பின் அவரை அந்த மாணவர்களும், இளைஞர் அஜயும் சேர்ந்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்து சென்றுள்ளனர்.
வங்கிக்கு பின்புறம் அழைத்து சென்று 3 மாணவர்கள் மற்றும் 22 வயது இளைஞர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அந்த 3 மாணவர்களும் மாணவியை விடவும் சிறிய வயதுடையவர்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாநகர காவல்துறையினர் உடனடியாக 2 சிறுவர்கள் மற்றும் 22 வயது இளைஞரான அஜய் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு பள்ளி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே 22 வயதாகும் இளைஞர் அஜய்-க்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று அந்த பள்ளி மாணவி கூறியதாக தகவல் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 18 வயதிற்கு குறைவானவர்கள். இதன் காரணமாக 3 பேர் மீதும் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி சிறுவர்கள் இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications