மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம்! சிகரெட் பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க! அன்புமணி அட்வைஸ்!
மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுத்த அன்புமணி
காஞ்சிபுரம்: மாணவர்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்றும் சிகரெட் புகையை இழுத்து வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி தாங்களும் உயர்ந்து சமூகத்தையும் உயர்த்த வேண்டும் என அட்வைஸ் அளித்திருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். இது தொடர்பான விவரம் வருமாறு;

''காலநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் படிக்கும் வயதிலேயே நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மாறிவரும் காலநிலை மாற்றத்தால் மிக மோசமான சூழலை இந்த உலகம் எதிர் கொள்ள இருக்கிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக சிகரட்டை ஒருமுறை இழுத்து பார்க்கலாம் என மாணவர்கள் எண்ணக்கூடாது.
ஒரு முறை சிகரெட் புகையை இழுத்து விட்டால் அதோடு வாழ்க்கையே முடிந்து விடும். படிக்கும் வயதில் மாணவர்கள் தவறான பழக்கங்களுக்கு செல்லாமல் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும்.
ஒரு ஆண் படித்தால் அவன் மட்டுமே படித்த மாதிரி அதுவே ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்த மாதிரி. பெண் கல்வி என்பது மிக மிக அவசியமான ஒன்று.
மாணவர்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாயிலும் மரங்களை நடும் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி தாங்களும் உயர்ந்து சமூகத்தை உயர்த்த வேண்டும்.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications