Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உட்கார்ந்து பேசி கொண்டிருந்த 3 பேரை.. திடீரென தீ வைத்து கொளுத்திய நபர்.. குமரி அருகே பெரும் பரபரப்பு

3 பேர் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

குமரி: உட்கார்ந்துபேசி கொண்டிருந்த 3 பேர் மீதும் திடீரென பெட்ரோலை ஊற்றி தி வைத்து கொளுத்திவிட்டார் ஒருவர்.. இந்த பரபரரப்பு சம்பவம் குமரியில் நடந்துள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி... இவர்கள் 3 பேரும் இன்று சன்னதிதெரு லைப்ரலி முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென்று அந்நூலகத்தின் எதிர்வீட்டில் வசிக்கும் ராஜசேகரன் அங்கு வந்தார்.. அவர் ஒரு கூலி தொழிலாளி.. கையில் பெட்ரோலை கொண்டு வந்திருந்த அவர், அவர்கள் 3 பேர் மீதும் மளமளவென ஊற்றி தீ வைத்து கொளுத்தியும் விட்டார்.

 A Man poured petrol on 3 youths due to Prejudice near Kumari

இதனால் அவர்கள் 3 பேரும் பதறிபோய் அலறி கொண்டு ஓடினர்.. அவர்களால் வலி பொறுக்க முடியாமல், உடம்பெல்லாம் பற்றி கொண்ட நெருப்பால் அங்குமிங்கும் அலறி ஓடினர்.. ஆனாலும் கொஞ்ச நேரத்திற்கொல்லாம் அவர்கள் உடல் வெந்துவிட்டது.

3 பேரும் உயிரோடு தீயில் அலறியதை கண்டு அங்கிருந்தோர் பதறி போய் அவர்களை காப்பாற்றினர்.. அவர்களை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸபத்திரியிலும் அனுமதித்தனர்.. 3 பேருக்கும் தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள்
விரைந்து வந்து ராஜசேகரனை கைது செய்ய வந்தனர்.. ஆனால், அதற்குள் அவர் வீட்டுக்குள் போய் கதவை உள்ளே பூட்டிகொண்டார்.. இதனால் போலீசார் கதவை உடைடத்துதான அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.. ஆனால் ராஜசேகரன் பெட்ரோலை எடுத்து போலீசாரின் மீதும் ஊற்ற வந்தார்.

பிறகு, வீட்டின் பின்பக்கம் தப்பித்து ஓடினார்.. ஆனால், ஓடும்போது அந்த பெட்ரோலை தன் மீதும் உற்றி கொண்டார்.. தீயையும் பற்ற வைத்து கொண்டார்.. இதில் தீ வேகமாக பரவியிருக்கிறது... ஆனால், அதற்குள் போலீசார் அவரை காப்பாற்றிவிட்டனர்.. ஆனால், 95 சதவீத தீக்காயம் அடைந்துவிட்டார்.. பிறகு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதித்தனர்.

இதுகுறித்து, விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் ராஜசேகரன் கோயில்களில் பூஜை செய்பவர் என்று தெரியவந்தது. இவர் பூஜை வேலை செய்வதால், அதே பகுதியை சேர்ந்த சதீஷ், காளி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்து வந்தார்களாம்.. அதுமட்டுமல்ல, காளியின் மனைவி குறித்தும் தவறான தகவல்களை மெசேஜ் மூலம் பரப்பி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இவர்களுக்குள் மோதலும் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அவமானமும், ஆத்திரமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகரித்துவிட்டதல், அவர்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் ராஜசேகரன்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+