போனில் யாரு? கோபத்தில் கொந்தளித்த கணவன்.. மனைவி சொன்ன "அந்த" பதில்.. அடுத்த நொடி நடந்த கொடூரம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருமணமான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டவுன் ரயில்வே நகர் பகுதியில் ஆண்டனி - பத்மா தம்பதியினர் வசித்து வந்தனர். ஆண்டனி வெட்டூரணி மடத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த சில வருடங்களாக பத்மாவை காதலித்து வந்த நிலையில், இரண்டு பேரும் 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

கன்னியாகுமரி
தொடக்கத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாகவே சென்றுள்ளது. ஆனால் போக போக கணவன் ஆண்டனி மனைவி மீது சந்தேகம் அடைய தொடங்கி உள்ளார். என்ன செய்தாலும் அதை ஆண்டனி சந்தேக பார்வையோடு பார்க்க தொடங்கி உள்ளார். மனைவி மீது அடிக்கடி சந்தேகம் அடைந்து கேள்வி எழுப்பி சண்டை போட்டுள்ளார். பத்மா அடிக்கடி தனது நண்பர்களுடன் போன் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார்.

சண்டை
இதன் காரணமாகவே ஆண்டனி அடிக்கடி பத்மாவுடன் சண்டை போட்டுள்ளார். பத்மா போன் பேசுவதை ஆண்டனி தொடக்கத்தில் இருந்தே விரும்பவில்லை. முக்கியமாக தனது ஆண் நண்பர்களுடன் பத்மா பேசுவதை ஆண்டனி விரும்பவில்லை. இந்த சண்டை நாளுக்கு நாள் பெரிதாகி இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இப்படி ஒரு சந்தேக பேர்வழியுடன் வாழ முடியாது என்பதை போக போக பத்மா உணர்ந்து கொண்டார்.

விவாகரத்து
இதையடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பம் செய்தனர். விவாகரத்து வரும் வரை இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை பத்மா வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் கணவர் ஆண்டனியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் கன்னியாகுமரி , திருவனந்தபுரம் வட்டாரத்தில் ஆண்டனியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆண்டனி வடசேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கொலை
அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி பத்மாவை நான்தான் கொலை செய்தேன். பத்மா வெள்ளிக்கிழமை போன் பேசிக்கொண்டு இருந்தார். யாருடன் பேசுகிறாய் என்று கேட்டேன். அதற்கு விவாகரத்திற்கு விண்ணப்பித்துவிட்டோமே, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று கேட்டு சண்டை போட்டார். அந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டேன் என்று ஆண்டனி வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications