கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசு vs பா.ஜ.க .. முற்றும் மோதல்.. இவருக்கு என்ன தகுதி இருக்கு?.. அண்ணாமலையை தாக்கிய அமைச்சர்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு மத்தியில் தமிழக அரசு-பாஜக இடையே கடும் மோதல் மூண்டு வருகிறது.

திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன? திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?

''முதல்வர் ஸ்டாலின் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு செல்வது ஒரு டுரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி இருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்க முதல்வருக்கு மனமில்லை.

தைரியம் இருந்தால்...

தைரியம் இருந்தால்...

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்கு போடுவது சரியல்ல. தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்'' என்று அண்ணாமலை தமிழக அரசை சாடினார். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.

மோடி என்ன செய்தார்?

மோடி என்ன செய்தார்?

இதனை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அண்ணாமலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர், ' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளச்சேதங்களை ஊர் ஊராகச் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். ஆனால் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் எந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்க்காமல் கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் படங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார்.

எந்தவித தகுதியும் இல்லை

எந்தவித தகுதியும் இல்லை

அதனால் அவரது கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை தமிழகம் பற்றி கூறுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

அவர்களுக்கு மனமில்லை

அவர்களுக்கு மனமில்லை

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். பேரிடர் இழப்பீடு என்பது மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும் இணைந்துதான் வழங்கவேண்டும். ஆனால் பாஜகவினர் மத்திய அரசை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். இது ஏன்? என்று தெரியவில்லை. நாங்கள் இரவு-பகலாக வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதை பாராட்டுவதற்கு அவர்களுக்கு மனமில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

English summary
Information Technology Minister Mano Thankaraj says that Annamalai is not qualified to talk about Chief Minister MK Stalin. He also says that they were working fast day and night but they did not have the heart to appreciate it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X