கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு ஊழியருக்கு அடி உதை?: ADMK எம்எல்ஏ தளவாய்சுந்தரம் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸ் வழக்கு

அரசு விடுதி ஊழியரை தாக்கி, உடனிருந்த ஆதரவாளர் நகைப்பறித்ததாக எழுந்த புகாரில் அதிமுக எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : பொதுப்பணித்துறை தங்கும் விடுதி ஊழியரையும், அவரது மனைவியையும் ஆதரவாளர்களுடன் தாக்கியதாகவும், அவரது மனைவியின் நகையை பறித்துச் சென்றதாகவும் புகாரில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது திருட்டு, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோடி விழாவில் அவமானம்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... அசால்ட் காட்டிய தளவாய்சுந்தரம் மோடி விழாவில் அவமானம்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... அசால்ட் காட்டிய தளவாய்சுந்தரம்

மாஜி டெல்லி பிரதிநிதி, கன்னியாகுமரி எம்.எல்.ஏ

மாஜி டெல்லி பிரதிநிதி, கன்னியாகுமரி எம்.எல்.ஏ

கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ. தளவாய் சுந்தரம். முன்னாள் அமைச்சரான இவர் அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும், முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். தற்போது கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

தோவாளையை சேர்ந்த இவர் மீது தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரான நடேஷ்(33) என்பவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் மீது தாக்கு

பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் மீது தாக்கு

ஒப்பந்த ஊழியரான நடேஷ் புகாரில் கூறியிருப்பதாவது, "நான் தோவாளை அரசு விருந்தினர் இல்லத்தில் பணியாளாக உள்ளேன். விருந்தினர் இல்லத்தின் பின்புறம் நானும் என் மனைவி பிரேமா, குழந்தைகள், என் தாயாருடன் வசிக்கிறேன். கடந்த 16 ஆம் தேதி நான் தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியில் இருந்தபோது, தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர் அதிமுக ஒன்றியச் செயலாளர் மகாராஜப்பிள்ளை வந்து எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் வருகிறார் வந்து கதவை திறந்துவிடு என்றார். நான் கதவை திறந்துவிட்டு வந்து என் அறையில் இருந்தேன்.

எம்.எல்.ஏ 7 பேர்களுடன் வந்தார். சிறிது நேரம் கழித்து ரபீக் என்பவர் வந்து அண்ணாச்சி அழைக்கிறார் என்று அழைத்துச் சென்றார். நான் அறைக்குச் சென்றேன். தளவாய் சுந்தரம் என்னைபிடித்து சட்டையைக்கிழித்து என்னை முகநூலில் தப்பாக போடுவாயா என்று முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி தாக்கினர். ரபீக் என்பவர் என் கன்னத்தில் அறைந்தார்.

மனைவி மீதும் தாக்கு நகைப்பறிப்பு

மனைவி மீதும் தாக்கு நகைப்பறிப்பு

தடுக்க வந்த எனது மனைவியும் தாக்கப்பட்டார். பூக்கடை ராஜு என்பவர் என் மனைவி கன்னத்தில் அறைந்து அவர் அணிந்திருந்த 1 பவுன் தாலி, 3 பவுன் தங்கச்சங்கிலியைப் பிடுங்கிக்கொண்டார். எனப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் தளவாய் சுந்தரம், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உட்பட 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (கலவரம் ஏற்படுத்துதல்), 294 (பி) (அவதூறாக பேசுதல்), 323( அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1)( கொலை மிரட்டல், 379 (திருட்டு) போன்ற 5 பிரிவுகளில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் சம்பவம் குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

English summary
Attacking a government employee: Police file case against 8 including Talawai sundaram MLA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X