மாஜி அமைச்சர் சுரேஷ் ராஜனை கை கழுவிய திமுக தலைமை! கன்னியாகுமரி மாவட்ட திமுக ரவுண்ட் அப்!
கன்னியாகுமரி: திமுக உட்கட்சித் தேர்தலில் மாஜி அமைச்சர் சுரேஷ் ராஜனை மொத்தமாக கை கழுவி அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது திமுக தலைமை.
முதலமைச்சர் குடும்பத்தினரிடம் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட சுரேஷ் ராஜனுக்கே கட்சியில் இந்த நிலையா என, குமரி மாவட்ட திமுகவினர் கடந்த 2 நாட்களாக விவாதித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக நாகர்கோவில் மேயர் மகேஷையும், கன்னியாகுமரி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜையும் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சியவர் சுரேஷ் ராஜன். அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பல பதவிகளை மிகவும் இளம் வயதிலேயே பார்த்தவர். இதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர். இப்படி பல பின்னணியை கொண்ட சுரேஷ் ராஜனுக்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள திமுக உட்கட்சித் தேர்தலில் எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.

சுரேஷ் ராஜன்
இதை வைத்து பார்க்கும் போது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீதான முதல்வரின் கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பது தெரிய வருகிறது. இதற்கு காரணம் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மேயர் பதவியை கைப்பற்றும் விவகாரத்தில் சுரேஷ்ராஜனின் செயல்பாடு குறித்த ரிப்போர்ட் தான். தலைமை மட்டும் கொஞ்சம் அலர்டாக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாகர்கோவில் மாநகராட்சி பாஜக வசம் சென்றிருக்கும்.

மனோ தங்கராஜ்
அந்தளவுக்கு அப்போது திரைமறைவு அரசியல் லாபிகள் நடந்தன. இதனிடையே உட்கட்சி அரசியலில் சுரேஷ் ராஜனுக்கு கடும் டஃப் கொடுத்து வந்த அமைச்சர் மனோ தங்கராஜூக்கு ஏறுமுகமாக உள்ளது. இதேபோல் சுரேஷ் ராஜனிடம் அரசியல் பயின்ற அவரது ஜீனியரான நாகர்கோவில் மேயர் மகேஷுக்கும் கட்சியில் கிராஃப் உயர்ந்து வருகிறது. அண்மையில் திருவனந்தபுரம் வந்த முதல்வர் ஸ்டாலின் இவர்கள் இருவருடனும் மனம் விட்டு பேசி சிரித்த புகைப்படம் ஒன்றே அதற்கு சாட்சியகும்.

ஆதரவாளர்கள் அணி மாறல்
திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் மூலம் சுரேஷ்ராஜன் கட்சியில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த அவரது ஆதரவாளர்கள் சிலர், இனியும் இப்படியே இருந்தால் தங்கள் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகும் என்பதால் மெல்ல அணி மாற ஆரம்பித்துள்ளார்கள்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications