நெஞ்சே பதறுதே.. பெண்ணை காலால் எட்டி உதைத்த பாஜக கவுன்சிலர் சாவர்க்கர்.. கன்னியாகுமரியில் ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இடத்தகராறில் பாஜக ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் பெண்ணை எட்டி உதைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் வடமாநிலங்களை போல் பாஜகவுக்கு இங்கு செல்வாக்கு என்பது இல்லை. இந்நிலையில் தான் பாஜகவை வளர்க்கும் நோக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகள் ‛என் மண்; என் மக்கள்' என்ற பாதயாத்திரையை நடத்தி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்குள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் பாதயாத்திரையை முடித்து கட்சியை பலப்படுத்தும் பணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பாதயாத்தியை மேற்கொண்டார்.
இத்தகைய சூழலில் தான் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜக ஒன்றிய கவுன்சிலர் பெண் ஒருவரை பொதுவெளியில் எட்டி உதைத்த செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அதங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அந்த பகுதியில் உள்ள இன்னொரு பெண்ணுக்கும் இடையே இடத்தகராறு உள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் பாஜக ஒன்றிய கவுன்சிலரான சாவர்க்கர், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் உள்பட 4 பேர் அங்கு சென்று சரோஜாவை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இடவிவகாரம் தொடர்பாக அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின்போது அவர்கள் சரோஜாவை தாக்கி உள்ளனர். மேலும் பாஜக ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் தனது காலால் சரோஜாவை எட்டி உதைத்துள்ளார்.

இதனால் சரோஜா காயமடைந்தார். இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டார். மேலும் சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாஜக ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர், மெதுகும்மல் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் சரோஜாவை பாஜக ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் தனது காலால் எட்டி உதைத்ததை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாக வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி சரோஜா கூறுகையில், ‛‛சாவர்க்கர் உள்ளிட்டவர்கள் என்னை தாக்கினர். மேலும் சாவர்க்கர் என்னை எட்டி உதைத்தார். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications