கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது
கன்னியாகுமரி: முன்னாள் எம்எல்ஏவும் தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான குமாரதாஸ் இன்று மாலை காலமானார். நெஞ்சு வலி காரணமாக குமாரதாஸ் உயிரிழந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் தற்போது காலமாகியுள்ள குமாரதாஸ்.

கடந்த 1984, 1991, 1996, 2001 உள்ளிட்ட ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவாக நான்கு முறை இருந்தவர் குமாரதாஸ்.
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக குமாரதாஸ் பதவி வகித்து வந்தார். இவர் ஜனதாதளம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் மீண்டும் காங்கிரஸ் கடைசியாக மீண்டும் வாசன் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இடையில் கடந்த டிசம்பர் 2002ம் ஆண்டில், தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கட்சியையும் குமாரதாஸ் உருவாக்கினார்.
இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட போது இரு முறை ஜனதா தளம் சாா்பிலும், இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.
1984-ம் ஆண்டு மற்றும்1991 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications