கிரீஷ்மா கைதி எண் 1 சி - 2025 எஸ்எஸ்.. இந்தியாவையே உலுக்கிய கன்னியாகுமரி பெண்.. சிறையில் இனி எப்படி?
கன்னியாகுமரி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அட்ட குளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரீஷ்மாவிற்கு 1 சி - 2025 எஸ்.எஸ். என்ற எண் வழங்கப்பட்டு உள்ளது. குறைந்தது 4 மாதம் சிறையில் முழு நேரமும் கிரீஷ்மா அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை உடனே நிறைவேற்றப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அங்கு வழக்கு முடிந்ததும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் என்று காரணம் சொல்கிறார்கள்.
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த 23 வயதாகும் ஷாரோன்ராஜ் , கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அந்த சமயத்தில் ஷாரோன்ராஜ்க்கும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மாவுக்கும் (24) காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்த போது பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி அன்று ஷாரோன்ராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு உடல்நிலை மோசமானதால் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உறுப்புகள் செயலிழந்தது. இதையடுத்து மாணவன் ஷாரோன்ராஜ் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஷாரோன்ராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் எனவும் பெற்றோர் ஜெயராஜ், பிரியா ஆகியோர் பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த வழக்கை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து காதலி கிரீஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து தீர்த்துக்கட்டியது அம்பலமானது. மேலும் காதலி கொடுத்த விஷம் கொஞ்சம், கொஞ்சமாக ஷாரோன்ராஜின் உடல்நிலையை பாதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில் காதலனை கொன்றது ஏன்? என்பது குறித்து விசாரித்த போது,
பெற்றோர் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்வதற்காக தனது காதலனான ஷாரோன்ராஜை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இந்த வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை தமிழ்நாட்டில் விசாரிக்க வேண்டும் என்று கிரீஷ்மா கோரிக்கை வைத்திருந்தார். ஏனெனில் தமிழ் நாடு குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியில் இருக்கும் கிரீஷ்மாவின் வீட்டில் வைத்து தான் ஷாரோன் ராஜுக்கு விஷம் கலந்த கசாயம் கொடுத்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கை கேரள போலீசார் விசாரிக்க அவர்கள் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் ஷாரோன்ராஜை கடத்தி சென்று விஷம் கொடுத்து கொலை செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர். இதனால் தான், இந்த வழக்கை கேரள போலீசார் விசாரிக்க காரணமானது மேலும் இந்த வழக்கில் விசாரணையை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற கிரீஷ்மாவின் கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றம் நிராகரிக்கவும் காரணமாகவும் இருந்தது. இந்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு கடந்த 20-ந் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் கோர்ட்டு விதித்தது. அதனைத் தொடர்ந்து கிரீஷ்மா மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அட்ட குளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் அட்ட குளங்கரை சிறை என்பது, கேரளாவில் பெண் கைதிகளுக்காக உள்ள பெரிய சிறைகளில் ஒன்று ஆகும். இங்கு அடைக்கப்பட்டுள்ள கிரீஷ்மாவுக்கு 1 சி - 2025 எஸ்.எஸ். என்ற கைதி எண் வழங்கப்பட்டு உள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால். சிறையில் உள்ள கிரீஷ்மா இனி அடுத்த 4 மாதம் சிறையில் முழு நேரமும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார். அதன்பின்னரே சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார். ஏற்கனவே ஒரு வருடத்திற்கு மேல் இதே சிறையில் தான் கிரீஷ்மா இருந்து வருகிறார். பொதுவாக தூக்குதண்டனை கைதிகளுக்கு மற்ற கைதிகளை போல் பரோல் போன்ற சலுகைகள் கிடைக்காது. அந்த வகையில் கிரீஷ்மா எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது.
அதேநேரம் கிரீஷ்மா தீர்ப்பு நகலை பெற்று கேரள உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் அப்பீல் செய்ய முடியும். ஆனால் இது போன்ற வழக்குகளில் குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகள் கழித்தே மனுக்கள் விசாரிக்கப்படுவதால், உடனே தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை..ஒருவேளை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். அங்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பலாம். குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தின் மூலம் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற முடியும். அவரும் நிராகரித்தால் மட்டுமே கிரீஷ்மா தூக்கில் போடப்படுவார். ஆனால் அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.
கேரளாவில் தற்போது கிரீஷ்மா உட்பட 35 பேர் தூக்கு தண்டனை பெற்று பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரை மத்திய சிறையில் 23 பேரும், கண்ணூர் சிறையில் 4 பேரும், விய்யூர் சிறையில் 4 பேரும், விய்யூர், திருவனந்தபுரம் மகிளா சிறைகளில் தலா 2 பேர் என மொத்தம் 35 பேர் தூக்கு தண்டனை கைதிகளாக உள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications