கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பச்சை பச்சையாக.. "ஆபாச" கிளாஸ்.. ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்.. திரண்ட டீச்சர்களால் திடீர் ட்விஸ்ட்

கன்னியாகுமரி ஆசிரியர் போக்சோவில் கைதாகி உள்ள நிலையில் ஆசிரியர்கள் ஆதரவு தந்துள்ளனர்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: போக்சோவி கைதான ஆசிரியர் ஒருவருக்கு ஆதரவாக, பள்ளி ஆசிரியர்கள் ஒன்று திரண்டுள்ளது ஆசிரியர் கைதான வழக்கில் திடீர் திருப்பத்தை தந்துவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி ஆசிரியராக இருக்கிறார்.. பெயர் கிறிஸ்துதாஸ்.

பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர் பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர்

 டபுள் மீனிங்

டபுள் மீனிங்

இவர் வகுப்பறையில் ஆபாசமாக பேசுவதாக பிளஸ்-1 மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் தந்திருக்கிறார்கள்.. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்தும் புகார் தந்தனர்.. அதில், ஆசிரியர் கிறிஸ்துதாஸ் பிளஸ்-1 வகுப்பறையில், மாணவ-மாணவியரிடம் சம்பந்தமில்லாத வகையில் ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் 'செக்ஸ்' பாடம் நடத்தி வருகிறார் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.

 டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட்

டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட்

அதுமட்டுமல்ல, அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ-மாணவிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் சொல்லி, மாற்று சான்றிதழ் பெற வைத்து விடுவேன் என்றும் மிரட்டுகிறாராம்.. ஆசிரியரின் இந்த மோசமான செய்கையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகிறார்கள், அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் மாணவிகளின் பெற்றோர் கூறியிருந்தனர்... இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் உடனடியாக உத்தரவிட்டார்.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

இதையடுத்து குளச்சல் மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்... இறுதியில், ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிறிஸ்துதாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்... ஆசிரியர் கிறிஸ்துதாஸ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

 சினிமா பாட்டு

சினிமா பாட்டு

ஆனால், மற்றொரு பக்கம் கிறிஸ்துதாஸுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள்.. மேலும் போக்ஸோ வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.. இதை பற்றி ஆசிரியர்கள் சொல்லும்போது, மாணவிகள் சிலர் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு சினிமா பாடல் எழுதி வைத்திருக்கிறார்கள்.. இதைதான் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கண்டித்தார்.. அந்த சினிமா பாட்டை அனைவர் முன்னிலையிலும் மத்தியில் படித்து காண்பித்துள்ளார்...

 பயாலஜி

பயாலஜி

மேலும் தவறு செய்த மாணவிகள் குறித்து புகார் சொல்வதற்காக, வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வரவும் கூறியிருக்கிறார்.. இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டுதான், தேவையில்லாமல் மாணவிகள், ஆசிரியர் மீது பொய் புகார் அளித்துள்ளனர்.. அந்த புகார் மட்டுமே வைத்துக் கொண்டு, எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், ஆசிரியர் மீது சிலரின் தனிப்பட்ட அழுத்தம் காரணமாக போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறார்கள்.. இந்த ஆசிரியர் கிறிஸ்துதாஸுக்கு இதே பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் காதல் கடிதங்களை தந்திருக்கிறார்கள்..

 டபுள் மீனிங்

டபுள் மீனிங்

இந்த கடிதத்தை பார்த்த கிறிஸ்துதாஸ், அந்த மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இதற்கு பயந்துபோய்தான் புகார்களை தந்துள்ளார்கள் மாணவிகள்.. எனவே, உடனடியாக அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும்.. இல்லையென்றால் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றனர்.. ஆனால், மாணவிகளோ வேறுவிதமாக ஆசிரியர் பற்றி சொல்கிறார்கள்..

 பச்சை.. பச்சையாய்

பச்சை.. பச்சையாய்

ஆசிரியர் கிறிஸ்துதாஸ் எப்பவுமே டபுள் மீனிங்கில்தான் கிளாஸ்ரூமில் பேசுவார் பேசுவாராம்.. குழந்தை பிறப்பது எப்படி என்பது பற்றி பச்சையாகவே பாடம் எடுப்பாராம்.. அப்போது யாராவது முகம் சுளித்தால் 'நீங்க எல்லாம் அப்படித்தான் வந்தீங்க' என்று விளக்கமாக சொல்லுவாராம்.. மாணவிகள் இப்படி புகார்களை தந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோவிலும் கைதான நிலையில், அவருக்காக மற்ற ஆசிரியர்கள் திரண்டு வந்து சப்போர்ட் செய்வதும், போராட்டத்தை நடத்துவோம் என்று கூறியிருப்பதும் வழக்கில் திடீர் திருப்பத்தை தந்துள்ளது..!

English summary
Kanniyakumari School Teacher Christudoss case and why did police arrest under posco
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X