புதுவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை
புதுவை: புதுவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுவை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி உத்தரவிட்டுள்ளது.
புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது வீட்டருக்கே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாயமாகிவிட்டார். பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

பின்னர் 2 நாட்கள் கழித்து அந்த சிறுமி வீட்டருகே இருந்த கால்வாயில் சடலமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியானது.
இதையடுத்து சிறுமியை கொன்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் 55 வயது முதியவர் விவேகானந்தன், 18 வயது கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை ஐஸ்கிரீமை காட்டி அழைத்து சென்ற கருணாஸ், விவேகானந்தனின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். கருணாஸைத் தொடர்ந்து விவேகானந்தும் அந்த குழந்தையை பலாத்காரம் செய்த போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையை இருவரும் மூட்டை கட்டி கால்வாயில் வீசிப்பட்டு மறுநாள் ஒன்று தெரியாதது போல் நடித்து ஊர்மக்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியது தெரியவந்தது.
இந்த நிலையில் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே சிறுமியின் உடலுடன் அவருக்கு பிடித்த பொம்மைகள், உடைகள் வைக்கப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலாப்பட்டு சிறையில் இருவரும் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை வைத்து கழுத்தை நெரித்து தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்துள்ளார். உடனே அங்கிருந்த கருணாஸ் சப்தம் போட்டதுடன் வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார்.
இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே விவேகானந்தன், கழிவறைக்குச் சென்று துண்டால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கு கருணாஸிடம் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 30ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்த புதுவை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி, மே 5 ஆம் தேதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் 5 ஆம் தேதி கருணாஸுக்கான தண்டனையை வெளியிடவில்லை. தண்டனை விவரங்கள் 8-ஆம் தேதி வழங்கப்படும் என்றார். அதன்படி இன்றைய தினம், குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications