"நான் கிறிஸ்டியன்.. அவர் முஸ்லீம்.. மீறி கல்யாணம் செஞ்சோம்.. மிரட்டறாங்க".. இளம்பெண்ணின் கண்ணீர்!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட குமரியை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்
கன்னியாகுமரி: "அவன் முஸ்லிம், நான் கிறிஸ்டியன்.. எங்க வீட்ல இந்த காதலுக்கு ஒத்துக்கல.. அதனால, சாதி மறுப்பு கல்யாணம் செய்துக்கிட்டோம்.. இப்போ என் வீட்டுல எனக்கு நிறைய நெருக்கடி தர்றாங்க.. இப்படியே பண்ணிட்டு இருந்தால், நான் தற்கொலைதான் செய்துப்பேன்" என்று 19 வயசு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ளது நெய்யூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் செல்வின் என்பவர் மகள் சஜி... 19 வயதாகிறது.. இவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பிகாம் 2-ம் வருடம் படித்து வருகிறார்.
தற்போது லாக்டவுனில் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சஜியை காணவில்லை.. இதனால், சஜியின் பெற்றோர் இரணியல் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.

விசாரணை
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தபோது, சஜி ஷியாங்கோ என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சஜியின் பெற்றோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சமயத்தில், சஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் கண்ணீர் மல்க பேசியதாவது:

கிறிஸ்டின்
என் பேர் சஜி.. ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையனை லவ் பண்ணிட்டு வந்தேன்.. அவன் பேர் ஷியாங்கோ.. அவன் முஸ்லிம், நான் கிறிஸ்டின்.. எங்க வீட்ல ஒத்துக்கல.. சாதி வெச்சி நிறைய பிரச்சனை எங்க வீட்டுல வந்தது.. குத்தி காட்டி பேசிட்டே இருந்தாங்க.. அது எனக்கு பிடிக்கல.. அதனால ஷியாங்கோவுக்கு ஒரு மெயில் போட்டிருந்தேன்.

சாதி மறுப்பு திருமணம்
என் வீட்டுல இப்படி பேசுறது எனக்கு பிடிக்கல, அதனால தற்கொலை செய்துக்க போறேன்னு ஷியாங்கோ கிட்ட சொன்னேன்.. அப்படி தப்பான முடிவு எதுவும் எடுக்க வேணாம்னு சொன்னான். அப்போ அவ்ளோ அக்கறையா இருந்தால் என்னை வந்து கூட்டிட்டு போயிடுன்னு சொன்னேன்.. அதனாலதான் என்னை கூட்டிட்டு போனான்.. சாதி மறுப்பு கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். மத்தபடி அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் இதுல எந்த சம்பந்தமும் இல்லை.

கண்ணீர் வீடியோ
இப்போ ஷியாங்கோ குடும்பதாரை பிடிச்சு ஸ்டேஷனில் வெச்சிருக்காங்களாம்.. நாங்க சரணடைந்தால்தான் அவங்களை விடுவோம் என்று போலீசார் மிரட்டிட்டு இருக்காங்க. இப்படியே மிரட்டினால், அன்னைக்கு நான் சொன்னமாதிரி தற்கொலைதான் செய்துப்பேன்... இதுக்கு காரணம் கண்டிப்பா என் குடும்பத்தில் உள்ளவர்களாகத்தான் இருப்பாங்க. என் மனசில் இருப்பதை சொல்லிட்டேன்" என்று கூறுகிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications