தற்கொலை செய்த தம்பி.. அதிர்ச்சியில் அப்படியே உயிரை விட்ட அண்ணன்.. கன்னியாகுமரியில் சோகம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதிர்ச்சியடைந்த அண்ணன் மாரடைப்பால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். ஒரே வீட்டை சேர்ந்த சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் ஸ்ரீகண்டன் 41 வயதான இவர் தக்கலையில் சொந்தமாக கார் ஒன்று வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் ஸ்ரீகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக இன்னோவா கார் ஒன்றை எடுத்துள்ளார் இதனால் அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிகிறது இதனால் ஸ்ரீகண்டன் கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்

மனைவிக்கு சந்தேகம்

மனைவிக்கு சந்தேகம்

இந்நிலையில் வேலை முடித்து இரவு வீடு திரும்பிய ஸ்ரீகண்டன் மனைவியுடன் பேசாமல் அறைக்குள் சென்று அறை கதவை பூட்டியுள்ளார் இதனால் சந்தேகமடைந்த மனைவி சந்தியா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீகண்டன் அண்ணன்கள் பிரபாகரன், மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் தகவலளித்துள்ளார்

உயிரிழப்பு

உயிரிழப்பு

அவர்கள் வீட்டிற்கு வந்து அறை கதவை உடைத்து பார்த்த போது ஸ்ரீகண்டன் அறை மின் விசிரியில் சேலையில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார் அண்ணன்கள் இருவரும் அவரை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு கொண்டு சென்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு ஸ்ரீகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

இந்த தகவலை பிரபாகரன் மற்றும் மணிகண்டனிடம் மருத்துவர்கள் கூறிய போது மணிகண்டன் தம்பி இறந்த அதிர்ச்சி தகவலை கேட்டு சம்பவ இடமான மருத்துவமனையிலேயே மயங்கி சுருண்டு விழுந்தார் உடனடியாக மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மணிகண்டனை சோதித்த போது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது

அண்ணன் தம்பி பலி

அண்ணன் தம்பி பலி

இதனையடுத்து தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் தம்பி தற்கொலை செய்து இறந்த அதிர்ச்சி தகவலை கேட்டு மாரடைப்பால் உயிரிழந்த அண்ணன் மணிகண்டனும் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மஞ்சு என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் அடுத்தடுத்து இரு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் இரண்டு குடும்பத்தின் நான்கு குழந்தைகள் ஆதரவின்றி நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+