லவ் டார்ச்சர் கொடுத்த ஆண்டனி.. விபரீத முடிவெடுத்த ஏஞ்சல்! கல்லாலேயே அடித்துக் கொ*ற உறவினர்கள்! ஷாக்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த இளைஞரால், பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் உயிரிழந்ததால் ஆத்திரத்தில் இளைஞரை இழுத்து வந்து கற்களாலேயே அடித்தே கொலை செய்திருக்கின்றனர் பெண்ணின் உறவினர்கள். கடந்த மே மாதமே பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில், இளைஞர் ஆண்டனி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வந்த பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலில் அந்த பெண் விபரீத முடிவெடுத்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனடனிராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகளான மென் பொறியாளரான ஏஞ்சல் என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

Kanyakumari Crime Police

ஏஞ்சலின் வேலைக்கு செல்லும் போதும் வரும் போதும், ஆண்டனிராஜ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் ஒருமுறை அவரை பிடித்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜாமீனில் வந்த ஆண்டனி ராஜ் தொடர்ந்து இளம்பெண் ஏஞ்சலிடம் தன்னை காதலிக்க வேண்டும் என டார்ச்சர் கொடுத்துள்ளார். ஏஞ்சல் இது குறித்து மீண்டும் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு அவர் தொல்லை கொடுத்ததால் மனவருத்தமடைந்த இளம்பெண் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் சாவுக்கு காரணமான ஆன்டனிராஜ் மீது கடும் ஆத்திரமடைந்து அவரை தேடியுள்ளனர்.

Kanyakumari Crime Police

அப்போது ஆன்டனிராஜ் கொட்டாரம் சந்திப்பில் நிற்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண்ணின் உறவினர்கள் ஆன்டனிராஜை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு இளம்பெண் தற்கொலை செய்த வீட்டிற்கு கொண்டு வந்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி உடல் கூறும் ஆய்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடித்து கொலை செய்த உறவினர் களையும் தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+