காதல் வெறி.. பள்ளிக்குள் புகுந்து.. கழுத்தில் கத்தியை வைத்து.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர்!
பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
குமரி: பள்ளிக்குள் நுழைந்து.. கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அவள். திங்கள்நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 6-ம் தேதி இளைஞர் ஒருவர் பள்ளிக்கு சென்று, ஸ்கூல் தலைமை ஆசிரியரை சந்தித்தார். தான் மாணவியின் சொந்தக்காரர் என்றும், மாணவியின் அப்பா இறந்துவிட்டார், கூட்டிட்டு போக வந்திருப்பதாகவும் சொன்னார்.

சந்தேகம்
இதையடுத்து தலைமை ஆசிரியர் மாணவியை அழைத்து, வந்திருப்பவர் உறவினர்தானா, என்ன உறவு முறை என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவி சொன்னதும், இளைஞர் சொன்னதும் முரணாக இருந்தது. இதனால் இளைஞர் மீது சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர், "வேறு டீச்சருடன் மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்" என்று சொன்னார்.

கழுத்தில் கத்தி
இதைக் கேட்டதும், இளைஞருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. என்கூட அவளை அனுப்ப போறீங்களா இல்லையா என்று கத்தினார். அப்போதும் தலைமை ஆசிரியர் மறுக்கவே பக்கத்தில் நின்றிருந்த பள்ளியின் பெண் ஊழியரை தாவி பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்தார். இப்ப என்கூட அவளை அனுப்பலேன்னா, இவங்க கழுத்தை அறுத்துடுவேன்" என்று மிரட்டவும், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அங்கிருந்த எல்லோருமே நடுங்கிவிட்டனர்.

ஜெய்ராம்
உடனே மற்ற டீச்சர்கள் ரூமுக்குள் ஓடிவந்து இளைஞரை மடக்கி பிடித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசாரிடம் இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. சம்பந்தப்பட்ட இளைஞர் பெயர் ஜெய்ராம், வயது 29 ஆகிறது என்பதும், ராஜபாளையத்தை சேர்ந்த இவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

சிறை
மாணவியுடன் சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, அது காதலாக மாறியுள்ளது மாணவி வீட்டில் விஷயம் தெரியவும், கருங்கல் வந்து மாணவியை பெங்களூருக்கே கடத்தி சென்றிருக்கிறார் இளைஞர். இது சம்பந்தமாக போலீசில் புகார் தந்து, மாணவியை மீட்ட போலீசார், ஜெய்ராமையும் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.

4 பிரிவுகள்
சிறையில் இருந்த ஜெயராம், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் குருந்தன்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, தினமும் காலையில் கருங்கல் ஸ்டேஷனில் கையெழுத்திட்டுவந்தார். இப்போது 2-வது முறையாக மாணவியை பள்ளியில் நுழைந்து கடத்த முயன்றபோதுதான் சிக்கிவிட்டார். தற்போது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications