டாஸ்மாக் கடைகளை மட்டும் குறி வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்.. குமரி அருகே பரபரப்பு
Recommended Video

ஆரல்வாய்மொழி: கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய மர்ம நபர்கள் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் அரசு மது பான கடையை பூட்டி விட்டு டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் முருகன் என்பவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அரிவாளால் அவரை தாக்கினர்.

பின்னர் அவரது இரு சக்கர வாகனத்தையும் அதில் இருந்த 5 லட்சம் ருபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பினர். தாக்குதலில் மேற்பார்வையாளர் முருகன் படுகாயம் அடைந்தார்.
அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆரால்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக டாஸ்மார்க் கடைகளை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடைகளை இரவு நேரங்களில் பூட்டி விட்டு செல்லும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே, போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications