”தமிழ் மிகவும் அழகான மொழி” கற்றுக் கொள்வதற்கு கடினம்.. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலகல!
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தமிழ் மொழி குறித்து பேசியுள்ள கருத்துகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். முதல் நாளில் 600 மீட்டர் தூரம் வரை மட்டுமே நடைபயணத்தை தொடர்ந்த ராகுல் காந்தி, 2ம் நாளில் அகஸ்தீஸ்வரத்தில் தொடங்கினார்.
அப்போது நீர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சகோதரரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த சமூக அமைப்புகளை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். இப்படி பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

தேநீர் அருந்திய ராகுல் காந்தி
அதன் தொடர்ச்சியாக 3வது நாள் நடைபயணத்தில் இன்று தொடங்கிய ராகுல் காந்தி சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அதனைத்தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி அவர்களுக்கு தேநீர் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ராகுல் காந்தி பேட்டி
இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து கூறுகையில், நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி. ஆனால் கற்றுக்கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

விமர்சனங்களை வரவேற்கிறேன்
தொடர்ந்து நடைபயணம் குறித்த கேள்விக்கு, இந்தியாவின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். நடைபயணம் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்கிறேன். காங்கிரஸ் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது. மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை கேட்பதே நடைபயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

பாஜக மீது குற்றச்சாட்டு
அதேபோல், நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து பாஜக செயல்படுகிறது. பலரும் பாஜக உடன் கைகுலுக்கி சுமூகமாக செல்ல நினைக்கின்றனர். பலவித கருத்தோட்டங்களை கொண்ட இந்தியாவில் ஒற்றை கருத்தை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று விமர்சித்தார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications