கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்திரைப் பௌர்ணமி... அழகிய நிலவு.. அரிய நிகழ்வு.. குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சித்திரைப் பௌர்ணமி..குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்-வீடியோ

    கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், சித்திரைப் பௌர்ணமி நாளன்று, சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் அரிய நிகழ்வை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர்.

    உலகில் ஆப்ரிக்கா நாட்டின் அடர்ந்த காட்டுபகுதியிலும், கன்னியாகுமரியில் மட்டுமே சித்திரைப் பௌர்ணமி நாளன்று, வானில் சந்திரன் உதயமாகி, சூரியன் மறையும், அதிசிய நிகழ்வை காண முடியும் என கூறப்படுகிறது.

    Tourists gathered In Kumari For Chithirai full moon

    அந்தவகையில் இந்த அபூர்வ காட்சியை பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு இன்று வருகை தந்தனர்.

    Tourists gathered In Kumari For Chithirai full moon

    மழை மேகங்கள் காரணமாக சூரியன் மறைவதை பார்க்க முடியவில்லை. அதே வேளையில் முக்கடலில் இருந்து சந்திரன் உதயமாகும் அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    Tourists gathered In Kumari For Chithirai full moon

    இந்த அரிய நிகழ்வைப் பார்த்து திரிவேணி சங்கமம் கடற்கரைப் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆரவாரத்துடன் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடற்கரைப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    English summary
    Rare occurrence: Tourists gathered In Kumari For Chithirai full moon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X