விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது விஜயை அருகே நின்று பார்க்க அவரது ரசிகரும், தவெக தொண்டருமான ஒருவர் சாக்கடையில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நீந்தி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இப்படி உயிரை பணயம் வைத்து சாக்கடையில் நீந்தி சென்றாலும் கடைசியில் அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டம் அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரண். இவர் கூலி வேலை செய்து வருகிறார். விஜயின் தீவிர ரசிகராக உள்ளார். இந்நிலையில் தான் நேற்று விஜய் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை அவர் வாகனத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது வரை விஜயை பக்கத்தில் நின்று பார்க்க சரண் முயன்றார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்குள்ள சாக்கடை கால்வாயில் குதித்து 3 கிலோமீட்டர் தூரம் வரை நீந்தினார். சாக்கடை கால்வாயில் இருந்து அவர் மேலே வந்த நிலையில் அதற்குள் விஜய் பேசிவிட்டு சென்றார். இதனால் அவர் ஏமாற்றமடைந்தார்.
இதுபற்றி சரண் கூறுகையில், ''விஜயை பார்க்க வந்தேன். ஆனால் பக்கத்தில் விடவில்லை. இதனால் நான் 3 கிலோமீட்டர் நீச்சலடித்து விஜயை பார்க்க வந்தேன். தலைவனை பார்க்க உயிர் போனாலும் பரவாயில்லை என்று தான் வந்தேன். அப்படி உயிர் போனால் போய் இருக்கட்டும். விஜயை பக்கத்தில் இருந்து பார்க்க வாய்ப்பே தராமல் உள்ளனர். இதனால் அவரை பார்க்க நீச்சலடித்து வந்தேன்'' என்றார்.
சாக்கடை கால்வாயில் இறங்குவது மிகவும் ஆபத்தானது. கழிவுநீர் செல்வதோடு, விஷ வாயுக்கள் இருக்கலாம். இது உயிரையே பறிக்கலாம். ஆனால் இந்த ஆபத்தை உணரால் தவெக தொண்டர் சாக்கடை கால்வாயில் 3 கிலோமீட்டர் நீந்தி விஜயை பார்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் சரணை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications