கன்னியாகுமரியில் பொள்ளாச்சி பெண்கள்.. பஸ் ஸ்டாண்டில் கையும் களவுமாக சிக்கி.. ஒரே அசிங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜி என்ற பெண் ஒரு பஸ்ஸில் 70 ஆயிரம் பணத்துடன் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ஈத்தாமொழி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது இரண்டு பெண்கள் நைசாக பணத்தை திருடியிருக்கிறார்கள்.. அவர்கள் அப்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்கள். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பேருந்துகளில் செல்லும் போது பணப்பை வைத்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும்..கூட்டமான பேருந்துகளில் ஏறக்கூடாது.. ஒருவேளை ஏறவேண்டிய நிலை இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கவனத்தை திசை திருப்பி பணத்தை பறிக்க திருடர்கள் தயாராக இருப்பார்கள். பணத்தை பறித்துவிட்டு நைசாக எஸ்கேப் ஆவார்கள்.

சாப்பிட கொடுப்பார்
சென்னையில் ஒரு பெண் இருக்கிறார்.. அவர் தாம்பரம் பகுதியில் பேருந்துகளில் ஏறுவார்.. அவர் கையில் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட கொடுப்பார். அவர் கொடுப்பதை சாப்பிட்ட உடன் பேருந்தில் ஏறும் பெண் மயங்கிவிடுவார். அவரிடம் அந்த பெண் நகைகளை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அவர் அண்மையில் தான் போலீசிடம் சிக்கினார்.
சிக்கிய பெண்கள்
இதேபோல் சில திருடர்கள் நைசாக பேச்சுக்கொடுத்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு திருடுவார்கள். இதேபோல் சிலர் பேருந்துகளில் ஏறியதும் தூங்கியவர்களை குறிவைத்து நகை பணத்தை திருடுவார்கள்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடிய பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளார்கள்.
70 ஆயிரம் பணம்
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆல்வின் என்பவர் கூலி தொழிலாளியாவார். இவருடைய மனைவி சுஜிக்கு 38 வயது ஆகிறது. இவர் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.70 ஆயிரத்து எடுத்துக்கொண்டு ஈத்தாமொழிக்கு அரசு பேருந்தில் புறபட்டார்.
2 பெண்களும் சிக்கினார்கள்
ஈத்தாமொழி சென்றதும் சுஜி பேருந்து இருந்து இறங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சுஜியின் அருகில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் நைசாக அவர் வைத்திருந்த பையை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரத்தை திருடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கவனித்த சுஜி உடனே திருடி திருடி என சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து ஈத்தாமொழி போலீசில் ஒப்படைத்தார்கள்.
பொள்ளாச்சி பெண்கள்
ஈத்தாமொழி போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாதப்பன் மனைவி வெள்ளச்சி (43), மணி மனைவி ஜோதி (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தார்கள். அத்துடன் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பெண்களும் வேறு இடங்களில் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications