Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரியில் 111.2 அடி உலகின் மிக உயரமான சிவலிங்கம்..என்னென்ன சிறப்பம்சம்.. இவ்வளவு சாதனைகளா?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: உதயம்குளம்கரை கோவிலில் உள்ள 111.2 அடி உயர உடைய சிவலிங்கம் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து பிரம்மாண்ட சிவலிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான உதயம்குளம்கரை பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது.

இதனையடுத்து, மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களுக்கு சென்று அந்த கோயிகளின் மாதிரியை கொண்டு பணிகள் நடைபெற்றது. 8 நிலைகளில் சிலை 111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் உள்ளது.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்

கணபதி உட்பட பல கடவுள்கள் சிற்ப வடிமைப்புடன் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும் மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டிட கலையுடன் கட்டப்பட்டு உள்ளது. இந்த சிவலிங்கம் சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம்பிடித்து உள்ளது.

111.2 அடி உயர சிவலிங்கம்

111.2 அடி உயர சிவலிங்கம்

இந்த கோவில் வளாகத்தின் வாயு மூலையில் 111.2 அடி உயரமும் 111 அடி சுற்றளவும் கொண்ட மஹாசிவலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரிவேணி சங்கமத்தில் உள்ள புண்ணிய தீர்த்தம் பாரதத்தின் புண்ணிய இடங்களில் உள்ள மண், பஞ்சலோகங்கள், நவதானியங்கள் , நவபாஷணங்கள் கொண்டு நிர்மாணிக்கபட்டது.

என்னென்ன சிறப்பம்சங்கள்

என்னென்ன சிறப்பம்சங்கள்

இந்த சிவலிங்கத்தின் உட்பக்கமாக 8 தளங்களை கொண்டுள்ளது. இதில் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து தீர்த்தம் எடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ள தளங்களுக்கு செல்லும் வழிகளில் முனிவர்கள் தவம் செய்வது போன்ற சொரூபங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம்

உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம்

இது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை பிரம்மிக்க வைக்கிறது. தொடர்ந்து எட்டாவது நிலையில் சிவ பார்வதியின் கைலாச தரிசனம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது கைலாசத்தை மக்கள் நேரடியாக எளிதில் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இந்த இடம் மட்டும்தான் உலகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

இந்த சிவலிங்கத்திற்கு ஏற்கனவே புக் ஆஃப் ரெக்கார்ட், ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ள நிலையில் தற்போது இதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து உலக நாடுகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து சிவலிங்கத்தை தரிசித்து சென்று வருகின்றனர்.

வேல்ர்ட் ரெக்கார்ட் யூனியன் சாதனை புத்தகம்

வேல்ர்ட் ரெக்கார்ட் யூனியன் சாதனை புத்தகம்

இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் வேல்ர்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை வேல்ர்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பிற்கு சமர்ப்பித்த நிலையில். இன்று அந்த அமைப்பின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் உட்பட நிர்வாகிகள் நேரடியாக கோவிலுக்கு வந்து வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் சான்றிதழ் புத்தகத்தை கோவில் நிர்வாகி சுவாமி மகேஷ்வரானந்த சரஸ்வதியிடம் வழங்கினர். இதற்க்கான விழா இன்று ஆலய வளாகத்தில் வைத்து நடந்தது. இதில் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் துறவிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+