கேரளாவில் கடத்தல்.. குமரியில் பதுங்கல்..! இளைஞர் சிக்கிய பரபர பிண்ணனி...!
கன்னியாகுமரி: கேரளாவைச் சேர்ந்த 11வது படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்தி வந்து கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
கேரள மாநிலம் கோவளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இருபத்தி நான்கு வயது இளைஞரான பிரகாஷ் படிப்பை முடித்தபின் அப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலை கிடைக்காமல் பொறுப்பின்றி சுற்றித்திரிந்த பிரகாஷ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.
பிரகாஷின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய மாணவி அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து செல்போன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்த இருவரும் பல இடங்களில்சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி பள்ளி மாணவி திடீரென மாயமானார்.

பள்ளி மாணவி மாயம்
பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து திருவல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவல்லா போலீசார், மாணவி பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னலை வைத்து விசாரணையை தொடங்கினர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. செல்போன் எண்ணும் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தது. தொடர்ந்து வேறு சிம்கார்டை அந்த செல்போனில் பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து நித்திரவிளை பகுதியில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

மாணவியை கடத்திய இளைஞர்
விசாரணையில் 17 வயதேயான அந்த பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 12ஆம் தேதி கடத்தி வந்த பிரகாஷ் அவருடன் , நண்பர் மூலம் நித்திரவிலையில் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி ஒன்றாக வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.

இளைஞரை கைது செய்த போலீசார்
இதையடுத்து மாணவியை மீட்ட நித்திரவிளை போலீசார் அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தியதோடு பாலியல் வன்கொடுமை செய்தற்காக பிரகாஷை கைது செய்து கேரளா அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவியை கடத்தி வந்து 20 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போலீசார் அறிவுரை
கேரளாவில் மாயமான சிறுமி தற்போது தமிழகத்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும், அவசியமெனில் கண்காணிப்பின் கீழ் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். தற்போது ஆன்லைன் வகுப்புகள் காரணமாக இளம் பள்ளி மாணவர்கள் செல்போனில் அதிகம் பயன்படுத்தி வரும், எளிதில் அவர்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு அவசியம் என்கின்றனர் காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications