வெளிநாட்டுக்கு போன கணவன்! கார் வாங்கி கனெக்ட் ஆன வடிவுக்கரசி!நடுரோட்டில் புரட்டியெடுத்த உறவினர்கள்!
கரூர் : கரூரில் கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் கார் வாங்க சென்றபோது பழகிய நபருடன் பெண் ஒருவர் தகாத உறவில் இருந்துள்ளார். இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் ஒன்று கூடி சம்பந்தப்பட்ட நபரை சாலையில் தரதரவென அடித்து இழுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் வடிவுக்கரசி . இவருக்கு விஜய் என்ற நபருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக கார் ஷோரூம் ஒன்றில் புதிய கார் வாங்குவதற்காக குப்புசாமி, வடிவுக்கரசி இருவரும் சென்றுள்ளனர்.

பழக்கம்
அங்கு சசி என்ற நபர் கார் மாடல்கள் தற்போது குறைவாக உள்ளதாகவும், புதிய மாடல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதாக வடிவுக்கரசியின் முழு விபரங்களை பெற்று திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதில் அவருக்கும் வடிவுக்கரசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போன் எண்களைப் பறிமாறிக் கொண்ட இருவரும் அடிக்கடி பேசி வந்திருக்கின்றனர். மேலும் ஒரு கட்டத்தில் வெளி இடங்களில் சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

எல்லை மீறி நட்பு
நாளடைவில் இருவருக்கு நெருக்கம் எல்லை மீறி நட்பாக ஏற்பட்ட பழக்கம், கள்ளக் காதலாக மாறியிருக்கிறது. கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் குழந்தைகளை விட்டு வீட்டை விட்டு வெளியேறி சசியுடன் வடிவுக்கரசி சென்றுள்ளார். சசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து எல்லை மீறி பழகி வந்ததாக சொல்லப்படும் நிலையில், இது குறித்து உறவினர்கள் கண்டித்த நிலையில், வடிவுக்கரசி அதனை கண்டுகொள்ளாமல் உறவை தொடர்ந்து வந்திருக்கிறார்.

தகராறு
இந்த நிலையில் வடிவுக்கரசி குடும்பத்தினரிடமிருந்து 30 லட்சம் வரை பணம் பெற்று சசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சசி மற்றும் வடிவுக்கரசி கரூரில் சவர்மா உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடிவுக்கரசியின் அப்பா குப்புசாமி மற்றும் உறவினர்கள் அந்த கடைக்கு இன்று நேரில் சென்று தங்களது குடும்பத்தை சீரழித்து விட்டதாக கேள்வி எழுப்ப சசி தகாத வார்த்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

கடும் தாக்குதல்
இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் சசியை வடிவுக்கரசியின் உறவினர்கள் ஒன்று கூடி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மடவளாகம் பகுதியில் அடித்து தரதரவென சாலையில் இழுத்து வந்துள்ளனர். இதில் சசிக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த கரூர் மாநகர காவல் துறையினர் விரைந்து வந்து சசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து குப்புசாமி மற்றும் அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications