அதிமுக ஆட்சியில் “மாயம்”.. மீண்டும் சீனுக்கு வந்த “முகிலன்”! குவாரி கொலைக்காக போராடியபோது கைது
கரூர்: கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலை சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில், ஜெகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அவரது உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் உதவி
நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
அத்துடன் விவசாயி ஜெகநாதனின் மகன்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறிய குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முகிலன் கைது
இருப்பினும் தமிழக அரசு ஜெகநாதன் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து, காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்த முகிலனையும் வழக்கறிஞர் சண்முகத்தையும் போலீசார் கைது செய்தனர்.

மாயமான முகிலன்
ஜெகன்நாதன் உடலை பெற விடாமல் குடும்பத்தினரை தடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முகிலனை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் சில மாதங்கள் காணாமல்போனபோது அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications