"சட்டையை" திருப்பிய முஸ்லிம்கள்.. கரூரில் தொழுகையில் பூமியை "பார்த்த" கைகள்.. குளிர்கிறது தமிழ்நாடு
கரூர்: கத்தரி வெயில் வாட்டி வதைத்துவரும்நிலையில், மழைவேண்டி, இஸ்லாமியர்கள் தமிழகமெங்கும் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகமெங்கும் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கிறது.. கடுமையான வறட்சி நிலவி வருகிறது.. இதனால் வனவிலங்குகளும் சேர்ந்தே பாதிக்கப்பட்டு வருகின்றன.

அக்னி நட்சத்திரம்: இன்றைய தினம் அக்னி நட்சத்திரம் துவங்கியிருப்பது கூடுதல் கலக்கத்தை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. தேவையில்லாமல் வெயிலில் அலைய வேண்டாம் என்று வானிலை மையமும், தமிழக சுகாதாரத்துறையும், தொடர்ந்து பொதுமக்களை கேட்டுக் கொண்டு வருகின்றன.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்கள்... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார சபை சார்பில், மழை வேண்டி கூட்டுத்தொழுகை தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகிறது..
விவசாயிகள்: விவசாயிகள் போதிய நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாலும், கால்நடைகளுக்கு புற்கள் கூட இல்லாமல் விவசாயிகள் தவிப்பதாலும், மழை பெய்ய வேண்டி இந்த தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன..
தமிழகத்தில் வரலாறு காணாத, இந்த கடும் வெப்பம் குறைய வேண்டும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்கும், கடும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பூமி குளிரவேண்டும் என்று இஸ்லாமிய சகோதரர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
பிரார்த்தனை: சேலம், கோவை, திருப்பூர், பெரம்பலூர் என ஒவ்வொரு மாவட்டத்திலும், இஸ்லாமிய சகோதரர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் மழை வேண்டி நடத்தப்பட்ட சிறப்பு தொழுகைக்கு பிறகு, அதில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
நேற்றுகூட, சேலம் கோட்டை பகுதியில் திறந்தவெளியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்... மாவட்டத் தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆண்கள்: இதில் ஆண்கள் சட்டையை திருப்பி அணிந்து கொண்டு, இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்கள். அதேபோல, கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதியிலும் டி.என்.டி.ஜே பள்ளியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். டி.என்.டி.ஜே மாவட்ட சொற்பொழிவாளர் ஷஜீர் தலைமையில் சட்டையை திருப்பி அணிந்து இஸ்லாமியர்கள் வழிபட்டு வருகிறார்கள்..
வழக்கமாக பிரார்த்தனையின்போது, கைகள் வானத்தை பார்த்து இருக்கும்படி பிரார்த்தனை செய்யும் நிலையில், மழை வேண்டி நடந்த இந்த பிரார்த்தனையில் கைகளை பூமியை பார்த்து நீட்டி தொழுகை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, வறட்சியால் தங்களது வாழ்க்கையே புரண்டு விட்டது என்பதை உணர்த்தும்விதமாகவே, தொழுகையின்போது, இஸ்லாமியர்கள் தங்களது சட்டையை திருப்பி அணிந்து கொண்டு வழிபடுகிறார்களாம்..!!
மகிழ்ச்சி: இதனிடையே மழை வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக வானிலை மையம் கூறியிருப்பது, இஸ்லாமிய சகோதர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications