3 பேரும் சிறுமிகள்..! 61 வயது கணபதி அரங்கேற்றிய பகீர்! 25 வருடம் இனி சிறை தான்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த 61 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கணபதி ( 61 ) . இவர் தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 14 , 15 , 17 வயதுடைய சகோதரிகளான 3 சிறுமிகள் கரூரில் டெக்ஸில் வேலை பார்க்கும் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்குச் சிறுமிகள் 3 பேரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி தீர்த்தம் , பொங்கல் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அப்போது அச்சிறுமிகளுக்குத் தனித்தனியே பலமுறை பாலியல் துன்புறுத்தல் தந்துள்ளார்.

தாய் புகார்

தாய் புகார்

இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த 2019 - ம் ஆண்டு புகார் அளித்தார் . இதையடுத்து குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ( போக்சோ ) சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

1.60லட்சம் அபராதம்

1.60லட்சம் அபராதம்

கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு , கணபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

முற்றுகை

முற்றுகை

இதனிடையே பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டை வைக்கும் நிலையில் மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பள்ளியின் முன்புறம் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அந்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+