கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புடவையை இழுத்து செருகி.. பட்சியாம், பறவையாம்.. ஒரே செகண்டில் கரூரையே கலக்கிய கவிதா.. கலக்கும் மேயர்

புடவையை செருகி ஒயிலாட்டம் ஆடும் மேயர் கவிதாவின் வீடியோ ஷேர் ஆகி வருகிறது

Google Oneindia Tamil News

கரூர்: சேலையை இழுத்து செருகி, கைகளை தட்டி டான்ஸ் ஆடும், கரூர் மேயர் கவிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Recommended Video

    டான்ஸ் ஆடும் கரூர் மேயர் கவிதாவின் வீடியோ

    கலைகளில் எவ்வளவுக்கு எவ்வளவு மண் சார்ந்த தன்மையை முன்னெடுத்து செல்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த கலைகள் அத்தனையும் உலகளாவிய தன்மையை பெற்றுவிடுகின்றன என்பதே உண்மை.

    3 மாதங்களாக சென்னையில் உயராத பெட்ரோல் டீசல் விலை .. இன்று 137-ஆவது நாளாக ஒரே விலை! 3 மாதங்களாக சென்னையில் உயராத பெட்ரோல் டீசல் விலை .. இன்று 137-ஆவது நாளாக ஒரே விலை!

    இது தமிழகம், இந்தியாவில் மட்டுமல்ல.. உலகளாகவிய உண்மையாகும்.. அப்படித்தான் பல்வேறு நாடுகள் தங்கள் கலைகளை திரைப்படங்கள், ஊடகங்கள், வாயிலாக விடாமல் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

     மேயர் டான்ஸ்

    மேயர் டான்ஸ்

    ஆனால், அதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் குறைந்து காணப்படுகிறது.. குறிப்பாக ஒயிலாட்டத்தை சொல்லலாம்.. தென்தமிழகத்தின் பிரபலமான நடனமும் கும்மியும், சேர்ந்ததுபோல் பாடிக்கொண்டே ஆடும் நடனம்தான் ஒயில் கும்மி என்பார்கள்.. இது கொங்கு மண்டலத்தில் வேளாண் மக்களிடம் ரொம்ப ஃபேமஸ் ஆன நடனம்.. இந்தக்கலையும் அழிந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. எனினும், இது பாரம்பரிய நடனம் என்பதால், வருடந்தவறாமல் இத்தகைய நடனங்களை கொங்கு மக்கள் ஆடி வருகிறார்கள்..

     ஒயிலாட்டம்

    ஒயிலாட்டம்

    அந்த வகையில், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் ஆகியவை நடந்தன.. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.. கொங்கு மக்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளம்தான் ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் நடனங்கள்.. அதற்கான அரங்கேற்றம்தான் நேற்றைய தினம் நடந்தது.. கொங்கு மக்களின் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காகவும், இளைய தலைமுறையை சேர்ந்த மக்களிடம் இந்த பாரம்பரிய கலையை கொண்டு சேர்க்கும் விதமாகவும், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது...

     கடவுள் பெயர்கள்

    கடவுள் பெயர்கள்

    இதில், நூற்றுக்கணக்கான சிறுமியர் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தங்களது பாரம்பரிய நடனமான ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.. சிறுமிகளும் ஆர்வத்துடன் வந்து, கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள்.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக, கொங்கு மக்கள் வணங்கும் கடவுள்களின் பெயர்களுடன் துவங்கும் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டது.. அந்தபாடல்களை கேட்டதுமே கூடியிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. இந்த பாடல்களின் இசைக்கேற்றவாறு பெண்கள் நடனமாடி பலரையும் பரவசப்படுத்தினர்.

    வீடியோ

    வீடியோ

    இந்த விழாவை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.. பெண்கள் அனைவரும் ஒயிலாட்டம் ஆடியதால், அவர்களுடன் இணைந்து மேயர் கவிதாவும் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார். சேலையை இழுத்து செருகி கொண்டு, அந்த பெண்கள் ஆடுவதை பார்த்து பார்த்து, கவிதாவும் கைகளை தட்டி ஒயிலாட்டம், ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்...

    வேலுமணி

    வேலுமணி

    இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பலத்த போட்டிகளுக்கு இடையே கரூர் மாநகராட்சியின் மேயராக பதவிக்கு வந்துள்ளவர் கவிதா. சமூக அக்கறையும், அரசியல் அனுபவமும் நிறைந்தவர்.. மேயராக பொறுப்பேற்றதும் தினமும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதுடன், பொது சுகாதாரம். சுத்தமான மாநகராட்சியாக கரூர் உருவாக வெண்டும் என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட துவங்கி உள்ளார்.. இப்போது கொங்கு பெண்களுடன் நெருக்கமாக இணைந்து நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

     வேலுமணி டான்ஸ்

    வேலுமணி டான்ஸ்

    மாஜி அமைச்சர் வேலுமணியும் இத்தகைய ஒயிலாட்டங்களை ஆடி வருகிறார்.. முக்கியமாக, கோயில் விழாக்களில் கலந்து கொண்டு, தவறாமல் இந்த ஒயிலாட்டத்தை ஆடி வருகிறார்.. அமைச்சரானபோதும் சரி, பதவியைஇழந்தபோதும் சரி, நடன குழுவினருடன் சேர்ந்து வள்ளி கும்மி, ஒயிலாட்டம் ஆடி வருகிறார்.. இப்படி சமீபத்தில் கோயில் திருவிழாவில் ஆடி கொண்டிருந்தபோதுதான், ரெய்டுக்கு அங்கே அதிகாரிகளின் பிளான் நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    super performance of karur corporation mayor dancing gummi video in function
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X