கரூரில் விஜய் செய்த தவறு.. உண்மையில் நடந்தது என்ன? போலீஸ் முதல்கட்ட விசாரணையில் ஷாக் தகவல்
கரூர்: கரூர் துயரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 12.45 மணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேரம் தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார்.

விஜய் இந்த கூட்டத்திற்கு தாமதமாக வந்தது முதல் காரணம். அதாவது அவர் காலை 8.15 மணிக்கு நாமக்கல்லில் கூட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வீட்டில் இருந்தே பொறுமையாக 8.45க்குத்தான் கிளம்பினார். இதனால் மாலை கரூர் கூட்டத்திற்கு 12.45 மணிக்கு வந்துவிட்டு 1.30க்குள் கிளம்ப வேண்டியர்.. 5 மணி நேரம் கழிந்து 6 மணி அளவில்தான் வந்தார். அவர் தாமதமாக வந்ததால் மக்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து.. நிறைய பேர் கூடி.. அதுவே கூட்ட நெரிசலுக்கு காரணமாக மாறியது.
தவெக விஜய்
பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர்.
விஜய் தன்னுடைய வாகனத்தின் கண்ணாடியை முன்பே இறக்கி இருந்தால்.. அவரை பார்த்த ரசிகர்கள் பலர் வெளியேறி இருப்பார்கள். ஆனால் விஜய் கண்ணாடியை மூடிக்கொண்டு வந்தார். இதனால் ரசிகர்கள் அவர் முகத்தை பார்க்க வேண்டும் என்று வாகனம் பின் ஓடி வந்தார்கள். இதனால் கூட்டத்தின் அளவு அதிகரித்தது. வாகனம் அருகே கூட்டம் நிரம்பியதால்.. அதுவே தள்ளுமுள்ளுவிற்கு காரணமாக மாறிவிட்டது.
விஜய் செய்த தவறு
அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர். கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை.
காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 10 ஆயிரம் பேர் வர வேண்டிய இடத்தில் போலீஸ் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கணித்து ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் வந்தது 30 ஆயிரம் பேர்.
கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிதான் இந்த இரண்டு இடமுமே குறுகிய இடம். ஏற்கெனவே தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கேற்ப தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் சரியாக கையாளப்படாதது, நினைத்ததை விட அதிக கூட்டம் இருந்தது இதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கரூர் துயரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
வரவு எட்டணா..செலவு பத்தணா! ஒரு மணி நேரத்துக்கு 7 கோடி வட்டி! விஜய்க்கு இது தான் மிகப் பெரிய தலைவலியே -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு












Click it and Unblock the Notifications