கறுப்பு ஆடு.. கூடவே இருந்து மாஜி கண்ணில் மண்ணைத் தூவிய அதிமுக கவுன்சிலர் யார்? கரூர் அரசியலில் பரபர!

Subscribe to Oneindia Tamil

கரூர் : கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் 5 முறை தள்ளி வைக்கப்பட்டு, பலவித கிட்னாப், சேஸிங் சீன்களுக்கு மத்தியில் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் திமுக கவுன்சிலர் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக கவுன்சிலர் ஒருவரும் திமுகவிற்கு கட்சி மாறி வாக்களித்தது தெரியவந்தது. அந்த 'கறுப்பு ஆடு' யார் என்பதுதான் கரூர் அதிமுக வட்டாரத்தில் பரபர பேச்சாக இருக்கிறதாம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக கவுன்சிலரே வெற்றி பெற வேண்டும் என உறுதியாக இருந்தார். கரூரில் செந்தில் பாலாஜி vs எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையேயான இந்த கேங் வாரில் தனது கை சரியக் கூடாது என உறுதியாக இருந்து வந்தார்.

ஏற்கனவே, அதிமுக கவுன்சிலர், போலீசாரால் கைது செய்யப்பட்டபோதும், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார் விஜயபாஸ்கர். இந்நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ஒரு கவுன்சிலர் திமுகவிற்கு வாக்களித்தது விஜயபாஸ்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக vs திமுக

அதிமுக vs திமுக

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 4 வார்டுகளை தி.மு.கவும், 8 வார்டுகளை அ.தி.மு.கவும் தன்வசப்படுத்தின. பின்னர் 2 அதிமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்தது திமுக. இதனால், திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் இருந்தன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளார். ஆனால் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் 5 முறை தள்ளி வைக்கப்பட்டது. ஆளுங்கட்சியான திமுக, எப்படியாவது துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அதிமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சித்தது.

மாஜி கட்டுப்பாட்டில்

மாஜி கட்டுப்பாட்டில்

அதிமுக கவுன்சிலர்கள் மீது பொய் வழக்குப் போட்டு மிரட்டுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி இருந்தார். சம பலத்துடன் இருந்த நிலையில் 6 கவுன்சிலர்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், திமுகவினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவே, தேர்தல் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், ஆனால், நீதிபதிகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

கவுன்சிலர் கிட்னாப்

கவுன்சிலர் கிட்னாப்

இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட மாவட்ட கவுன்சிலர் திருவிக என்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் திண்டுக்கலில் இருந்து காரில் கரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் பகுதியில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலர் திருவிகவை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

இதையடுத்து திருவிகவிற்கு பதிலாக துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க சார்பில் 12-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க சார்பில் 5-வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் போட்டியிட்டார். அதிமுகவின் ஒரு கவுன்சிலர் கடத்தப்பட்ட நிலையில், திமுகவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு படி சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட் தேர்தல் விவரங்களை ஆய்வு செய்து முடிவை அறிவிக்கலாம் என உத்தரவிட்டது.

திமுக வெற்றி

திமுக வெற்றி

அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகள் பெற்று மாவட்ட துணைத்த லைவராக வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.கவை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் 4 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது.

கட்சி மாறி வாக்கு

கட்சி மாறி வாக்கு

அதிமுகவின் 5 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில், அதிமுகவிற்கு 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. தி.மு.கவுக்கு வாக்களித்த 6 தி.மு.க உறுப்பினர்கள் தவிர, அ.தி.மு.கவைச் சேர்ந்த 5 பேரில் ஒரு கவுன்சிலர், தி.மு.க வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்ததால், 7 வாக்குகள் பெற்று தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. 5 முறை தள்ளி வைக்கப்பட்டு நடந்த இந்த தேர்தலில் அதிமுக கவுன்சிலர் ஒருவர்'கிராஸ் வோட்டிங்' செய்தது தெரியவந்துள்ளது. அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாலும், மற்றொரு அதிமுக கவுன்சிலரின் துணையுடனும் எளிதாக வென்றது திமுக. இது கரூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபர பேச்சு - விசாரணை

பரபர பேச்சு - விசாரணை

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஒரு அ.தி.மு.க உறுப்பினரை மிரட்டி, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்திருப்பதாக, அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். திமுக வேட்பாளருக்கு மாறி வாக்களித்த அந்த அதிமுக கவுன்சிலர் யார் என்பதுதான் கரூர் மாவட்ட அதிமுகவில் பரபர பேச்சாக இருக்கிறதாம். அத்தனை அதிமுக கவுன்சிலர்களையும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ஒருவர் திமுக தரப்புக்கு வாக்களித்தது எப்படி என மாஜி அமைச்சர் விசாரித்து வருகிறாராம்.

திமுகவை கண்டித்து

திமுகவை கண்டித்து

இதற்கிடையே, கரூரில் அதிமுக மாவட்ட கவுன்சிலரை கடத்தி அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். வரும் 29ஆம் தேதி, கரூர் மாநகரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+