• search
கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பனை மரத்தின் உச்சியில் மாரடைப்பு.. தலை கீழாக தொங்கிய கூலித் தொழிலாளி

|
  பனை மரத்தின் உச்சியில் மாரடைப்பு.. தலை கீழாக தொங்கிய கூலித் தொழிலாளி-வீடியோ

  கிருஷ்ணகிரி: பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே கணேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். 50 வயதான கணேசன் பனை மரம் ஏறும் தொழிலாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமும் ஆகி விட்டது.

  இந்நிலையில், நேற்று காலை பதநீர் எடுக்க மரத்தில் ஏறினார். அப்போது திடீரென அவர் உச்சியிலிருந்து தலைகீழாக தொங்கியுள்ளார். பதநீர் பறிக்க போனவர் திடீரென தலைகீழாக தொங்கவும், அவரது நிலையை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.

  பெரிய ஏணி இல்லை

  பெரிய ஏணி இல்லை

  அவர்களும், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து, உடனடியாக கணேசன் கீழே விழுந்துவிடாமல் இருக்க வலையை விரித்து கட்டினர். ஆனால், காவல்துறை, தீயணைப்பு துறை என இரண்டு துறையினர் வந்தும், மரத்தின் உச்சி வரை செல்ல அவர்களிடம் ஏணி இல்லை. சுற்றுவட்டார பகுதியிலும் உச்சிக்கு செல்லும் அளவுக்கு பெரிய ஏணி கிடைக்கவில்லை.

  வலையை விரித்தனர்

  வலையை விரித்தனர்

  தீயணைப்பு வீரர் யாராவது ஒருவர் மரத்தில் ஏறி கணேசனை மீட்கலாம் என்றாலும், மரத்தின் உச்சியில் எடை தாங்காது என்ற நிலை ஏற்பட்டது. அதனால் ஜேசிபி மூலம் பனை மரத்தை மோத முடிவு செய்தனர். கடைசியில் மரத்தில் ஜேசிபி வண்டியை மோதி மோதியே, தொங்கிக் கொண்டிருந்த கணேசனை கீழே விரித்துள்ள வலையில் விழ வைக்க முயற்சி செய்தார்கள்.

  சறுக்கி விழுந்தார்

  சறுக்கி விழுந்தார்

  ஆனால் ஒரு கட்டத்தில் கணேசன் மரத்தில் சறுக்கியபடியே கீழே விழுந்துவிட்டார். ஆனால் விரித்த வலையில் விழாமல், வேறு பக்கத்தில் மடார் என்று விழுந்ததால், அவரை அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கணேசனுக்கு உடனடியாக முதலுதவி செய்தார்கள். பிறகு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்.

  உச்சியில் மாரடைப்பு

  உச்சியில் மாரடைப்பு

  ஆனால் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். மேலும் மர உச்சியில் கணேசன் ஏறியபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள். இது சம்பந்தமாக சாமல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  கிருஷ்ணகிரி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வருடம்
  வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
  2014
  அசோக் குமார். கெ அஇஅதிமுக வென்றவர் 4,80,491 46% 2,06,591
  சின்ன பிலப்பப்பா .பி திமுக தோற்றவர் 2,73,900 26% 0
  2009
  சுகவனம் இ.ஜி திமுக வென்றவர் 3,35,977 45% 76,598
  நஞ்சேகௌடு கெ அஇஅதிமுக தோற்றவர் 2,59,379 34% 0
  2004
  சுகவனம் இ.ஜி திமுக வென்றவர் 4,03,297 55% 1,19,222
  நஞ்சே கௌடு. கெ அஇஅதிமுக தோற்றவர் 2,84,075 38% 0
  1999
  வெற்றிசெல்வன், வி. திமுக வென்றவர் 3,47,737 51% 31,824
  தம்பிதுரை, எம். அஇஅதிமுக தோற்றவர் 3,15,913 46% 0
  1998
  முனுசாமி கெ.பி அஇஅதிமுக வென்றவர் 3,15,762 51% 49,349
  ராஜாராம் நாயுடு டி.ஆர். டி எம் சி ( எம்) தோற்றவர் 2,66,413 43% 0
  1996
  நரசிம்ஹன் சி டி எம் சி ( எம்) வென்றவர் 3,71,009 56% 1,94,676
  இளங்கோவன் இ.வி.கெ.எஸ் காங்கிரஸ் தோற்றவர் 1,76,333 27% 0
  1991
  ராம மூர்த்தி கே. காங்கிரஸ் வென்றவர் 3,53,033 61% 2,13,114
  மாணிக்கம் ஆர். ஜேடி தோற்றவர் 1,39,919 24% 0
  1989
  ராமமூர்த்தி, கெ. காங்கிரஸ் வென்றவர் 3,62,376 61% 2,01,494
  வெங்கடசுவாமி, பி. ஜேடி தோற்றவர் 1,60,882 27% 0
  1984
  கெ. ராமமூர்த்தி காங்கிரஸ் வென்றவர் 3,04,854 65% 1,66,366
  டி. சந்திரசேகரன் திமுக தோற்றவர் 1,38,488 29% 0
  1980
  ராமமூர்த்தி கெ. ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,22,839 63% 1,00,511
  ராஜஹகோபால் வி. அஇஅதிமுக தோற்றவர் 1,22,328 35% 0
  1977
  பெரியசாமி பி.வி. அஇஅதிமுக வென்றவர் 2,22,979 66% 1,19,228
  கமலநாதன் எம். திமுக தோற்றவர் 1,03,751 31% 0
  1971
  டி. தீர்த்தகிரி கவுண்டர் காங்கிரஸ் வென்றவர் 1,86,114 55% 34,920
  டி. எம். திருப்பதி எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 1,51,194 45% 0

   
   
   
  English summary
  Worker got Sudden Heart Attack and dead Drooping Palm Tree near Krishnagiri

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more