விஜய்யை காட்டமாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.. எடப்பாடி பிளானே வேற!
கிருஷ்ணகிரி: "மக்களை சந்திக்காமல் வெறும் சினிமா புகழை வைத்துக்கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்" என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தை அடுத்த தளிஅள்ளி கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ பேசுகையில், "2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இதுவரையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருந்து வந்தது.

ஆனால், எதிர்வரும் தேர்தலில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக - திமுக இரு கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மறைந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் தான் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இவ்வாறான நிலையில் தமிழகத்தில் புதிய, புதிய கட்சிகளும் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அவர்கள் வெளியே சென்று மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை, ஏதோ சினிமாவில் நடித்தார்கள்.. அந்த சினிமா புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கி விட்டதை போல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்கிறார்கள். இந்தச் சூழலில்தான் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும். ஏனென்றால் இது மற்ற தேர்தலைப் போல இல்லை" எனப் பேசியுள்ளார் கே.பி.முனுசாமி.
தவெக தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என பேசி வருகிறார். இந்நிலையில், அவரை மறைமுகமாக தாக்கும் வகையில், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
"கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்று எடப்பாடி பழனிசாமியும் "விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தே ஆகவேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்பி உதயகுமார் போன்றவர்கள் அழைத்து வருவதற்கு மத்தியில் கேபி முனுசாமியின் விஜய் மீதான இந்த விமர்சனப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications