ஒரே அடி.. வலிப்பு வந்து இறந்த பிளஸ் 2 மாணவன்! சாவில் முடிந்த விளையாட்டு - பர்கூரில் பரபரப்பு
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ளது கப்பல் வாடி பகுதி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் நான்கு மணியளவில் சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு படிக்கும் இரண்டு மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

தகராறு
இந்த விளையாட்டின்போது மாணவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கோபமடைந்த ஒரு மாணவன் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டு இருந்த தென்னை பாளையில் கோபிநாத் என்ற சக மாணவனை தாக்கியுள்ளார்.

வலிப்பு
இதில் படுகாயமடைந்த கோபிநாத் தாக்கப்பட்ட அதே வேகத்தில் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார். அப்போது வலிப்பு நோய் ஏற்பட்டு மாணவன் கோபிநாத் துடிதுடித்து இருக்கிறார். இதனை கண்ட அங்கிருந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர். உடனே அவர்கள் மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

உயிரிழப்பு
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மாணவன் கோபிநாத்தின் உடல் நிலையை பரிசோதித்து இருக்கிறார்கள். அப்போது மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
மேலும் பள்ளி மாணவன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவன் இருவரும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழலுக்கு வாய்ப்புள்ளதாக கூறி பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications