கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணாமலை அவமானப்படுத்தியுள்ளார்.. பாஜகவுக்கு பத்திரிகையாளர்களை மதிக்க தெரியாது.. லியோனி விமர்சனம்!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நான்காவது முறையாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவமானம் செய்ததாக திமுக நிர்வாகி லியோனி விமர்சித்துள்ளார். நாட்டின் முதுகெலும்பாக உள்ள பத்திரிகையாளர்களை பாஜகவினருக்கு மதிக்க தெரியவில்லை என்றும், இதன் மூலம் பாஜக மக்களை விட்டு அந்நியப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம் என்று லியோனி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுகவின் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்றார்.

 பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் கேட்ட பாஜக..மோடியை தரச்சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் கேட்ட பாஜக..மோடியை தரச்சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான்

லியோனி பேட்டி

லியோனி பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து லியோனி கூறுகையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை பார்த்தால் திமுக கூட்டணி 2024 அமோக வெற்றி பெறும். அதுமட்டுமல்லாமல் பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. அதிமுக எடப்பாடி பழனிசாமி பக்கமா அல்லது ஓ.பன்னீர் செல்வம் பக்கமா என்று தெரியாமல், யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என தெரியாமல் முடிவு எடுக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.

மதிக்க தெரியாது

மதிக்க தெரியாது

தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம் செய்தது குறித்த கேள்விக்கு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேச முடியாத அண்ணாமலை 4வது முறையாக அவமானப்படுத்தி உள்ளார். நாட்டின் முதுகெலும்பாக உள்ள பத்திரிகையாளர்களை அதிமுக மற்றும் பாஜகவினருக்கு மதிக்க தெரியவில்லை.

திமுக பற்றி லியோனி

திமுக பற்றி லியோனி

இந்த விவகாரம் மூலமாகவே பாஜகவினர் மக்களை விட்டு அந்நியப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். பத்திரிகையாளர்களை மதிக்கின்ற ஒரே இயக்கம் திமுக தான். அதேபோல் குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் இடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனங்கள் இடம்பெறவில்லை.

குடியரசு தின விழா ஊர்திகள்

குடியரசு தின விழா ஊர்திகள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு வாகனத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றார். இன்று மத்திய அரசு அனுமதியளிக்கிறது என்றால் அது தமிழர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.

English summary
DMK executive Leoni has criticized BJP state president Annamalai for not being able to answer questions from journalists for the fourth time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X