மோடி ஆட்சியமைந்த பிறகு.. 8 வருடங்களில் இந்தியா வியத்தகு அளவில் வளர்ந்துவிட்டது- எல்.முருகன் பேட்டி
கிருஷ்ணகிரி: இந்தியா 8 ஆண்டுகள் வியக்கத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பெருமையாக கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணை உள்ளது. இந்த பண்ணையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் நேற்று பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். மத்திய அரசின் திட்டங்கள், சாதனை பற்றி அவர் எடுத்து கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:

டிஜிட்டல் இந்தியா திட்டம்
இந்தியா முழுவதும் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அரசின் நலத்திட்டங்கள் இடைத் தரகர்களின் தலையீடு இன்றி மக்களை சென்று சேர்ந்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முன்னனியில் உள்ளது.

வங்கி கணக்கில்
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

மீன்வளத்துறை அமைச்சகம்
நாட்டில் கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2014க்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ. 32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தை உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

50 சதவீத மானிய திட்டம்
சென்னை காசிமேடு ஹார்பரை உலக அளவுக்கு நவீனப்படுத்தும் வகையில் விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.இதற்காக கிட்டத்தட்ட 50 சதவீத மானியத்தோடு ஆடு, கோழி, பன்றி, மடு வளர்ப்பு என பல வாய்ப்புகளை மத்திய அரசு வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த நாடு கடந்த 8 ஆண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று மேலும் முன்னேறி வருகிறது'' என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications