கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"30 பர்சன்டேஜ் சாமி".. பாமகவின் ஏஜென்ட்.. அதிரவைத்த ஸ்டாலின்.. இதையேதானே "அவரும்" அன்னிக்கு சொன்னாரு

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: "ஒரு அதிமுகவினரை கூட ஜெயிக்க வைத்து, எம்எல்ஏ ஆக்கிடாதீங்க.. ஏன்னா, அவர் எப்படியும் பாஜகவின் எம்எல்ஏவாக மாறிவிடுவார்.." என்று திமுக தலைவர் பேசிய பேச்சு அந்தந்த தொகுதி மக்களை சிந்திக்க வைத்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.. வழக்கமான பிரச்சார பேச்சு இல்லாமல், ஸ்டாலின் கூறிய விஷயம் மொத்த தொகுதி மக்களையும் சிந்திக்க வைத்து வருகிறது.

ஸ்டாலின் பேசியது இதுதான், "ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் இருக்கிறார்... அவர் அமைச்சர் இல்லை.. ஆனால், அமைச்சராக இல்லாவிட்டாலும், அமைச்சர் போல் செயல்படுகிறார்... அவர் தான், 30,"பர்சன்டேஜ்" முனுசாமி.

பொதுக்குழு

பொதுக்குழு

ஜெயலலிதா இருந்தபோது நடந்த, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒன்று நடந்தது.. அப்போது உறுப்பினர்கள் சிலர் கூட்டத்தில் கோஷம் போட்டனர்... இதனால் ஜெயலலிதா என்ன ஏதென்று விசாரித்தபோது, அங்கிருந்தவர்கள், முனுசாமிக்கு எல்லாத்திலும் 30 பர்சன்டேஜ் கமிஷன் தர வேண்டும் என்றனர்.. அவ்வளவுதான், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியலில் முனுசாமிக்கு புது வாழ்வு கிடைத்தது... ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ்ஸுடன் முனுசாமியும் ஒட்டி கொண்டார்.. எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இணைந்தபிறகு, ஜெயலலிதா மரணத்தை பற்றி ஒருத்தரும் வாய் திறக்கவில்லை. இவங்க 2 பேரையும் மிரட்டி, எம்பி பதவி வாங்கிக்கிட்டார் முனுசாமி... இன்னும் நாலரை வருஷம் எம்பி பதவி இருக்கு.. ஆனால், அதுக்குள்ளேயே எம்.எம்எல்ஏ சீட் தந்திருக்காங்க..

 உண்மை இதுதான்

உண்மை இதுதான்

இப்படிப்பட்டவரை நாம் தோற்கடிக்க வேண்டாமா? ஆனால் ஒன்னு, அவர், அதிமுகவுக்கு துணை நிற்கிறாரோ இல்லையோ, பாமகவுக்கு ஏஜெண்ட்டா செயல்பட்டு கொண்டிருக்கிறார். 'ஜெயலலிதா மரணத்தை வெளி கொண்டு வரும் முயற்சியில், யாராவது ஈடுபடவில்லை என்றால், அவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்' என்று அன்னைக்கு சொன்னவர் இவர்தான்.. அப்படி சொன்ன இவரே, இந்த தேர்தலில் காணாமல் போக போகிறார்.. பாருங்க.. அதான் உண்மை.

எம்எல்ஏ

எம்எல்ஏ

அதனாலதான் சொல்றேன், ஒரு அதிமுகவினரை கூட ஜெயிக்க வைத்து, எம்எல்ஏ ஆக்கிடாதீங்க.. ஏன்னா, அவர் எப்படியும் பாஜகவின் எம்எல்ஏவாக மாறிவிடுவார்.. இதுக்கு காரணம் பாஜகவில் ஒருத்தர்கூட எம்எல்ஏ ஆக போறது இல்லை.. எடப்பாடி ஆட்சி கொடுமையை விட, இந்த வெயில் கொடுமை ஒன்னும் பெரிய கொடுமை இல்லை.. அதனாலதான் நீங்க எல்லாரும் ஒரு முடிவு செய்து இங்கு திரண்டு இருக்கீங்க.." என்றார்.

 வடமாநிலம்

வடமாநிலம்

ஏற்கனவே பாஜக, தேர்தலுக்கு பிறகு உள்ள அரசியல்தான் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும்.. வடமாநிலங்களில் இந்த யுக்தியைதான் கையில் எடுத்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது.. அந்த வகையில், வரப்போகும் தேர்தலிலும் பாஜகவின் காய் நகர்த்தல் எந்த அளவுக்கு இருக்க போகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக எம்எல்ஏக்கள், நிச்சயம் பாஜக எம்எல்ஏக்களாக மாறிவிடக்கூடும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது மக்களை சிந்திக்கவும் வைத்து வருகிறது.

English summary
MK Stalin slams KP Munusamy in Krishanagiri Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X