Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்றல்ல ரெண்டல்ல 14 மாணவிகள்..பாலியல் வக்கிரன் நாதக மாஜி சிவராமன்! கிருஷ்ணகிரியே கிறுகிறுத்து போச்சு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தவிர மேலும் பல மாணவிகளை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவராமன் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படையான என்சிசி பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.

krishnagiri pocso crime

இந்த நிலையில் அவர் மீது தான் தற்போது பகீர் புகார் எழுந்திருக்கிறது. அந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நான்கு என்சிசி பயிற்சி முகாம் ஆனது நடைபெற்று இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு அந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. அதிகாலையில் மாணவி ஒருவரை எழுப்பிய என்சிசி பயிற்சியாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளமான சிவராமன் அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்று தனது அருகே அமர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அச்சத்தில் உறைந்து போன அந்த மாணவியை மிரட்டி சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் புகார் கூறியிருக்கிறார். ஆனால் இது குறித்து வெளியே சொன்னால் பள்ளிக்கு பிரச்சினையாகிவிடும்ம் உன்னையும் படிக்க அனுப்ப மாட்டார்கள் எனவே இதனை இத்தோடு விட்டுவிடு என அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதை அடுத்து முகாம் முடிந்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி மிகவும் சோர்வாகவும் பதட்டத்துடனும் இருந்திருக்கிறார். இதை அடுத்து என்ன நடந்தது என பெற்றோர் அந்த மாணவியிடம் கேட்க அதிர வைக்கும் தகவல் வெளியானது. என்சிசி பயிற்சியாளரான சிவராமன் தன்னை மிரட்டி பாலில் வன்கொடுமை செய்ததும் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் அதனை மூடி மறைத்ததாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து பள்ளியின் என்சிசி பயிற்சியாளர் சிவராமன், முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமன் தலைமறைவாகி விட்ட நிலையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் தாளாளர், சாம்சன், ஆசிரியைகள் உள்ளிட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தலைவரைவான சிவராமன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இந்நிலையில் கோவையில் சிவராமன் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் சிவராமனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது தப்பிவோட முயன்ற அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவராமன் குறித்து பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி மட்டுமல்ல மேலும் பல மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு மிரட்டி பணிய வைத்துள்ளார் சிவராமன். போலீசாருக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி 13 மாணவிகளை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பள்ளியில் இருந்து வெளியே சென்ற சில முன்னாள் மாணவிகளையும் மிரட்டி அவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி இருப்பதாகவும், பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக தனியே காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. சிவராமன் செல்போனில் இருந்த வீடியோக்கள் புகைப்படங்கள் அழிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவற்றை மீட்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சைபர் க்ரைம் போலீசார் உதவியை நாட இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. நாளுக்கு நாள் சிவராமனின் பாலியல் லீலை தொடர்பாக பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் புகார் அளிக்க வரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+