தண்டக் காசு, கருமாந்திரம் பிடிச்ச காசு, யானைக்கு டவுசர் தைக்கிறாங்க.. சீமான் விமர்சித்தது யாரை? ஏன்?
கிருஷ்ணகிரி: சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புதல், சூரியன் ஆய்வுக்கு விண்கலம் அனுப்புதல் உள்ளிட்டவைகளை வீணான ஆய்வுகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் சீமான் சனிக்கிழமையன்று கூறியதாவது: இந்த ஆராய்ச்சிகளால் நமக்கு என்ன கிடைக்கும்? யோவ் இங்க வாய்யா.. 25 கோடி மக்கள் இங்க இரவு உணவு இல்லாமல் தூங்கி கொண்டிருக்கிறார்கள் என நீங்கதான் சொன்னீங்க.. கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு கொடுத்தோம்னு நிதி அமைச்சர்தாம்பா பேசுறாங்க.. இங்க வாங்கப்பா முதலில்..

13,000 பிச்சைகாரர்கள் கடத்தல்: சாலையை சவக்குழியில்லாமல் போடுங்கப்பா.. சாலையை ஒழுங்கா போடுடா அதான்டா டெவலப்... பிச்சைக்காரன் ஸ்வைப் மெஷின் வைத்து பிச்சை எடுப்பது டெவலப் இல்லையே.. பிச்சைக்காரனே இல்லாத நாடாக உருவாக்குவதுதான் வளர்ச்சி. காமன்வெல்த், ஜி 20 மாநாடுகளின் போது எத்தனை பதாகைகளை வைத்து குடிசைகளை மறைச்சீங்க.. உங்களால் நம்ப முடியுமா? 13,000 பிச்சைக்காரர்களை ஒரே நாளில் லாரியில் ஏற்றி வேற மாநிலத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டாங்க..

தண்டக்காசு, கருமாந்திரம் பிடிச்ச காசு: சரிப்பா.. சந்திரமண்டலத்துல மனிதர்களை குடியேற்றிட்டீங்க.. முதலில் யாரை ஏற்றுவ? இந்துவையா? கிறிஸ்தவரையா? இஸ்லாமியரையா? உன் நாட்டு மக்களை சந்திரமண்டலத்தில் குடியேறவிட்டுட்டு ரஷ்யா, அமெரிக்கா எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும்? தண்டக் காசு, கருமாந்திரம் பிடிச்ச காசு.. மனித கழிவை மனிதனே மூழ்கி எடுத்துகிட்டு இருக்கான். அமெரிக்காவில் எல்லாம் மனித கழிவை இயந்திரங்கள் எடுக்கிறது.. அதற்கு ஒரு மாற்றை உருவாக்க முடியலை. இன்னைக்கும் விஷவாயு தாக்கி செத்துகிட்டு இருக்கோம். 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுன்னு நீதிமன்றம் சொல்ற அளவுக்கு இருக்கு.

யானைக்கு டவுசர் தைக்கிறார்கள்: இயந்திரத்தில் வாக்குகளை போடுகிறோம்.. மனித கழிவை மனிதன் அள்ளுகிறான்.. 75 ஆண்டுகளாகிவிட்டது நாடு விடுதலை பெற்று. வளர்ச்சி என்பது எதை நோக்கியது? ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ரயில்கள் வந்து மோதி சாகிறான்.. இதை கணிக்க முடியலை. இவ்வளவுதான் உங்க தொழில்நுட்பம், வளர்ச்சி. ஏய் நான் சூரியனை பார்க்கப் போறேன்.. சூரியனை சுற்றி என்ன பண்ண போற? வாழ்கிற பூமியை உங்களால் காப்பாற்ற முடியலை. க்ளீன் இந்தியா திட்டம் என்னாச்சு? பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என நான் பேசலாம்.. ஒரு பிரதமர் பேசலாமா? இருக்கமாட்டாத டைலர்.. வேலை இல்லாம யானைக்கு டவுசர் தைச்சானு சொல்வாங்க.. அந்த கதைதான்.. இவனுகளுக்கு ஒரு வேலையும் இல்லை.. யானைக்கு டவுசர் தைச்சிகிட்டு இருக்காங்க.. இவ்வாறு சீமான் கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications