இனி வாரம் 2 மணி நேரம் போக்குவரத்து தடை.. மும்பைபோல் ஓசூரில் புது ரூல்ஸ் -இதுதான் காரணம்
கிருஷ்ணகிரி : மும்பை மாநகரத்தில் நடைமுறையில் உள்ளதைபோல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 2 மணி நேரம் சாலைகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி செய்ய போக்குவரத்து நிறுத்தப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சரோஜ்குமார் தாகூர் அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து மும்பையில் இருப்பதை போல் நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கான சிறப்பு திட்டத்தை அவர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி, ஒசூர் மாநகரில் முக்கியமான 5 இடங்களில் வாரம்தோறும் ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடைபயிற்சி மற்றும் சைக்கில் பயிற்சி மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம் ஓசூரிலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், மும்பை பெருநகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டம் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 2 மணி நேர இடைவெளியில் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓசூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க இரண்டு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு மாநில எல்லை என்பதால் ஒசூரை அடுத்து இருக்கக்கூடிய கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி சோதனைச்சாவடியிலும், வேப்பனஹள்ளி அருகே ஆந்திரா மாநில எல்லை பகுதியிலும் அதி விரைவுப்படை குவிக்கப்பட்டு கஞ்சா, குட்கா, ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். குட்கா, கஞ்சா கடத்தல் விற்பனை என்பது முழுமையாக தடுக்கப்படும்." என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications