கிருஷ்ணகிரியில் யாருங்க அது? போச்சம்பள்ளி வீடுகளுக்குள் அசால்ட்டா நுழையறாரே?தெறித்தோடிய ஜனம்.. கவனம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. ஏற்கனவே கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வரும்நிலையில், இந்த தொல்லையும் சேர்ந்து கொண்டதே என்று விழிபிதுங்கி உள்ளனர். என்ன நடக்கிறது கிருஷ்ணகிரியில்?
மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, குளம், குட்டை, ஏரிகளிலிருக்கும் உயிர்வாழ் இனங்கள் ஊருக்குள் வந்துவிடுவது இயல்பாகும்..

இப்படித்தான் கடந்த டிசம்பர் மாதமும் சென்னையின் புறநகர், உட்பட பல்வேறு மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளிலிருந்து, முதலைகள் வெளியேறி வந்துவிட்டன. சாலைகளில் மக்களுடன் மக்களாக, இந்த முதலைகளும் நடமாடி கொண்டிருந்தன.
பாம்பு: இப்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், இதே முதலை போன்ற உயிரினங்கள், வறட்சிக்காகவும், தண்ணீரை தேடியும் ஊருக்குள் வந்துவிடுகின்றன.. குறிப்பாக, மலைக்கிராமங்கள், மற்றும் கிராமப்புற பகுதிகளில் கோடைக்காலங்கள் வந்துவிட்டாலே இப்படியான தொல்லைகள் அதிகரிக்கும்.. அதிலும், பதுங்கி கிடக்கும் பாம்புகளுக்கு வெயில் காலம் வந்தாலே குஷிதான்.. கோடையில் எளிதாக நடமாட துவங்கிவிடும் பாம்புகள்..
இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாகவே வெயில் கொளுத்தி வருகிறது.. வனப்பகுதி நிறைந்த மாவட்டம் என்பதால், பாம்புகள், எலி உள்ளிட்ட உயிரினங்கள், வெப்பத்தில் இருந்து தப்பிக்க, ஊருக்குள் வந்துவிடுகின்றனவாம்.. ஊருக்குள் மட்டுமல்ல, வீடுகளுக்கும் படையெடுத்து விடுகின்றனவாம்..
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள எல்லா குடியிருப்புகளுக்குமே பாம்புகள் படையெடுத்து வருவது அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.. அதனால், அங்குள்ள பொதுமக்கள் போச்சம்பள்ளி தீயணைப்புக்கும், வனத்துறைக்கும் போனை போட்டு வரவழைத்து, பாம்புகளை பிடிக்க சொல்கிறார்களாம்.. தீயணைப்பு வீரர்களும் பாம்புகளை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் சொல்லும்போது, "கொடிய விஷமுள்ள பாம்புகள் தான், வீடுகளுக்குள் நுழைகின்றன.. இதனை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்... பாம்புகள் புகுந்தால், அதை துன்புறுத்தாமல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாலை நேரத்தில் வீட்டில் முன்பும், பின்புறக் கதவுகளை அதிக நேரம் திறந்து வைக்கக்கூடாது. மேலும், வீடுகளில் உள்ள ஜன்னல்களை நீண்ட நேரம் திறந்து வைக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
கிராமப்புறம்: எனவே, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள், தோட்டங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . செங்கற்கள், தேங்காய் மட்டைகள் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். செங்கற்கள், தேங்காய் மட்டைகளை வீட்டுக்கு அருகில் வைத்திருப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இரவு நேரம் மின்விளக்குகளை எரியவிட வேண்டும்.
ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல பாம்புபிடி வீரர்கள் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதன்படி, பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது.. பாம்பு கடிப்பட்டவரை விரைவாக அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது தான் நல்லது.
பாம்பு கடி: உடனடியாக கடிபட்ட இடத்தில் இறுக்கமான ஆடை அணிந்து இருந்தால் அதை அகற்ற வேண்டும், ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். நல்லதல்ல என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications